பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழெழுதிச் சோறுண்டு வாழ்ந்தி ருப்போர் தனிமொழியைத் தாய்மொழியை இகழ்ந்து பேசித் தமிழகத்தில் தமிழில்எழுத் தாளர் ஆவர் ; தப்பின்றிக் கலப்பின்றி எழுதும் முன்னேர் தமிழெல்லாம் பழித்துரைக்கும் கயமை யிங்கு தழைப்பதுவோ உரிமை ?அது மடமை. ; எங்கள் தமிழிகழ்வோர் நாவடக்கக் கொதித்துப் பாயும் தன்மானம் உடைமையன் ருே உரிமை யாகும் (Uடு) எழுத்தாளர் நெஞ்சத்தில் உரிமை வேண்டும் எப்படியோ உண்டுடுத்து மற்ருே ரைப்போல் பிழைத்தாலே போதுமென எழுதிக் கொட்டி வால்பிடித்துப் பின்செல்லல் உரிமை யன்று வழுக்காணின் அஞ்சாமல் எழுதி, வாய்மை வாழ்வதற்கு வழிவகுத்தல் உரிமை யாகும் இழுக்கான நடையெழுதிப் பிறரைத் தாக்கி எழுதுவதே தொழிலாதல் உரிமை யன்று (Сая) எழுத்துரிமை எனச்சொல்லி எழுதித் தீர்க்கும் ஏடுகளில் சிலவற்றைக் காணின் அங்குப் புழுத்திருக்கும் கயமைகளே காணும் ; எண்ணும் புலன் நடுங்கும் கைநடுங்கும் கண்கள் கூசும் ; கொழுத்தவர்கள் குடித்தனத்தில் நடக்கும் தீமை கொடுப்பதற்கோ செய்தித்தாள் ? படிப்பார் நெஞ்சை அழுக்காக்கிக் கெடுப்பதற்கோ உரிமை ? நல்ல அறிவுடையார் இச்செயலைச் சிறுமை என்பர் (0.எ) 120