பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தெற்றெனுமாறு - தெளிவாக; பெற்றி - இயல்பு; 9. காமத்துப்பால் வேண்டியதில்லை என்ற ஓரமைச்சர் முன் னின்றே அக் கூற்றை மறுத்துரைத்தார். 12. படிறு - வஞ் சனே; 13. துனி - பகைமை; 14-15. சென்னே யில் முன்பொரு சமயம் ஆலேத்தொழிலாளர் பதிஞன்கா யிரவர் ஒன்றுகூடி இவர் தலைமையில் போராட்ட ந் தொடங்கினர். தொழிலா ளர் பெரும் புரட்சிசெய்யக் கொதித்தெழுந்தனர். அப்போது திரு. வி. க. அமைதியுடன் இருக்கப் பணித்தனர். தொழிலா ளரும் கட்டுப்பட்டிருந்தனர், இந்நிகழ்ச்சியை இப்பாடல்கள் கூறுகின்றன. பிசகாமல் - பிழையில்லாமல்; இது வழக்குச் சொல். 17. கிளந்த எலாம்-முன்பு சொன்னவற்றை யெல் லாம்; அஃதாவது ஆட்சிக்கு வருமுன்பு சொன்னவற்றை யெல்லாம் ஆட்சிக்கு வந்தவுடன் மறந்துவிடுவதோ? என்று ஆள்வோரை நோக்கிக் கேட்டனர் என்பது. 18. அற்றேம்-செல்வமிழந்தோம்; அஃதாவது வறுமை யுற்ருேம்; திரு. வி. க. உடல்நலங்குன்றிப் படுத்தபடுக்கை யாய்க் கிடக்கையில், கோட்டையூர் க. வீ. அழ. ராம. இராமனுதன் செட்டியார் என்ற பெருமகளுர் அவரிடஞ் சென்று, அனைத்து உதவியும் செய்கின்றேன் என்று கூறித் தம்முடன் அழைத்தனர். திரு. வி. க. அவர்க்கு நன்றி தெரிவித்துவிட்டு, உடன் வர மறுத்துவிட்டனர். 21-22. காந்தியடிகள் தென்னகத்திற்கு வந்திருந்த பொழுது, அவரிடம் சிலர் திரு. வி. க. புரட்சி இயக்கத்தில் இறங்கி வன்முறைச் செயல்களில் தொழிலாளரைத் துாண்டி விடுகின்ருர் என்று கூறினர். அதனை உண்மையென்று நம்பிய அடிகள். தம்மைக் காணவந்த திரு. வி. க. வை. நோக்கி இரத்தந்தோய்ந்த கைகளுடன என்னைக் காண வந்தீர்?’ என்று கடிந்துகொண்டார். நட்பின் பண்புணர்ந்த திரு. வி.க.வின் தமிழ்நெஞ்சம் அச்சொல்லே மறந்துவிட்டது. சுமைமனத்தர் - தீயனவே சுமக்கின்ற மனமுடையவர்கள். 138