பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறியாமை; அஃதாவது இன்னவருக்குக் கொடுப்பது, இவ் வளவு கொடுப்பது, இந்நேரத்திற் கொடுப்பது என்றெல்லாம் வரையறை செய்யாமல் நாளேக்கு நமக்கு வேண்டுமே என்று எண்ணிப்பாராமல் - அறிவைப் பயன்படுத்தாமல் கொடுப் பது . 10. தொடக்கப்பள்ளி முதல் பலவகைக் கல்லூரிகளும் தோற்றுவித்தமை கூறப்படுகிறது. 12. அளகை அப்பன் - குபேரன்; இலட்சம் இலட்ச மாகக் கொடுத்துக் கொடுத்து அத்தொகைக்குரிய மதிப்பை எளிமையாக்கிவிட்டார். 13. மூக்கில் சுட்டுவிரல் சேர்த்தல் வியப்புக்குரிய அறி குறி. இவர் கொடை வீரத்தைக்கண் டோர் பெருவியப்புற்று இனிமேற் பாரி ஒருவனல்லன்; பாரி இருவராயினர் எனக் கூறுகின்றனர். 15. ஒருவர் தொகுத்த செல்வமெல்லாம் அவருடைய பரம்பரைக்கே உரிமையாதல் உலக இயற்கை; ஆனல் அழகப்பர் தொகுத்த செல்வமெல்லாம் அழகப்பா கல்லூரி உருவில் இருப்பதால் அவருக்கே உரியதாக்கிக் கொண்டார் என்று பெரியார் நயம்பட உரைத்ததைக் குறிக்கிறது இப் பாடல். ஆயினும் அச்செல்வத்துப் பயனே நம் மக்களே பெறுகின்றனர் என்றும் கூறுகிறது. பாடுகம் - பாடுவோம். 16. நிலையாமையை நன்குணர்ந்தமையால் செல்வ மெல்லாம் வாரி வழங்கி, அதனுல் பொன்ருப்புகழும் இன்ப மும் பெற்ருர் என்பது கருத்து. அலே ஆழி அலைவீசுங் கடல். 17. இப்பாடல் வஞ்சப் புகழ்ச்சியணியாக அமைந் துள்ளது. கொடுத்த பொருளினும் கொண்ட புகழ் மிகுதி யாதலின் வியப்பிற்கிடமில்லை என்றவாறு. மேலும் செல்வ மெல்லாம் கொடுத்தாரேனும் தாம் ஈட்டிய புகழில் ஒரு சிறிதும் கொடுக்கவில்லை; அதனுல் ‘கஞ்சன்’ எனச் சொல்ல லாம் என்று நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது. 141