பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீய நட்பு தகுதியிலார் தம்புகழே பரப்பு தற்குத் தாளமிடும் நட்புண்டு ; நண்பர் தம்முள் பகைவி8ளத்துக் கோள் சொல்லி இன்பங் கானும் பதர்மனிதர் நட்புண்டு ; மூன்று நான்கு பகலிருக்கும் சிற்றுண்டி நட்பும் உண்டு ; பண்பில்லாச் சிறுமதியர் செய்த ஒன்றை மிகவுரைத்து மகிழ்கின்ற நட்பும் உண்டு ; மெதுவாக வஞ்சிக்கும் நட்பும் உண்டு ; (கடு) தொடர் வண் டி நட்புண்டு ; பயனில் பேச்சுத் துணைக்காகத் திரிந்துவரும் நட்பும் உண்டு ; குடர்மிகுந்த தொந்திக்குப் பூசை செய்யக் கும்பிட்டு வால்பிடிக்கும் நட்பும் உண்டு ; பிடர் சொரிந்து வாய்பிளந்து புகழ்ந்து பேசிப் பின்புறத்து வசைபொழியும் நட்பும் உண்டு ; கடன் தந்து வளர்க்கின்ற நட்பும் உண்டு ; காசினியிர் ஈதெல்லாம் நட்போ சொல் வீர் (கசு) நட்பு மலர் உளமொன்றி உயிரொன்றி நன்மை தீமை உறுகாலத் துடனென்றி உயர்ந்த செல்வ வளமென்றுங் குலமென்றும் சமய மென்றும் வகைப்படுத்தி உணராமல் வாழின் உள்ளக் குள மன்றில் நட்புமலர் பூத்துக் காட்டும் ; குவலயத்தில் சிலரே இப் பண்பு ணர்ந்தார் ; கள வொன்றும் நெஞ்சுடையார் பணத்தை வீசிப் பெறமுயல்வார் கடைச்சரக்கா இந்த நட்பு ? (கஎ). 39