பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் காட்டும் நல்லுலகு : шасый) &Gя, wo விடும்கேளிர் வெண்கலிப்பா வணக்கம் செந்தமிழ்க்குக் காவலரே சிதம்பரநா தப்பெரியீர் ! பைந்தமிழின் பாடலுக்கோர் பரம்பரையைத் தந்தவரே ! இந்தக் கவியரங்கில் எழுந்தருளுங் கவிமணிகாள் : வந்து செவிமடுப்பீர் ! வணங்கிக் கவிசொல்வேன் : சுவை பிறந்தது ழங்கும் மலைக்குகையில் உயர்ந்த மரக்கிளே யில் ஆங்காங்கே தனிமனிதன் ஆர்ப்பரித்து வாழ்ந்திருந்தான் கூட்டு வாழ்வறியான் கொல்லும் வினையுடையான் காட்டு வாழ்வறிவான் காணும் விலங்கினத்தை வேட்டைத் தொழில் புரிந்து வேகாத் தசையுண் பான் காட்டு நெருப்பிடையே கருகிக் கிடந்தவொரு ஆட்டின் தசை சுவைத்தான் அடடா ! சுவைகண்டு போட்டுப் பொசுக்கிப் புசிப்பதுவே தொழிலாளுன் ; 41 3