உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசிவயிறும் குழிகண்னும் உடையா ரேனும் பார்வையிலே சுட்டெரிக்கும் தோற்றங் கொண்டோர் விசைஒடிந்த உடலெனினும் ஒவ்வோர் என்பும் வில்லாகும் அம்பாகும் வீரங் கொண்டோர் நசையோடு தலைவர் தரும் ஆணை கொண்டு நாவசையாப் பொம்மைகளாய் நிற்றல் கண்டேன் பிசகாமல் இனிதுசொல வல்லார்ப் பெற்ருல் பெருஞாலம் விரைந்துதொழில் கேட்கு மன்ருே ? (Dடு) புகழ்த் தோற்றம், எய்தரிய செயல் செய்து புகழால் மிக்கும் எஞ்சாத பழிமிகவாய் இயற்றி நின்றும் வய்யகத்து மன்றதனில் தோன்றி நிற்போர் வகைவகையாய்ப் பலருண்டு ; நம்பே ராசான் செய்யரிய செயல்செய்து தோன்றும் போழ்தே செவ்விய நற் புகழுடனே தோன்றி நின் ருர் உய்வகையும் நமக்குரைத்து மறையும் போதும் உலகத்தார் உள்ளமெலாம் புகழக் கொண்டார் (0கள்) கடுங்லைமை நடுநிலைமை ஒருசிறிது பிறழ்ந்தா ரேனும் நாடாளும் அமைச்சரவை இவர்க்கும் ஆங்கண் நடுவிருக்கும் ஒருபதவி தந்தி ருக்கும், நான் வணங்கும் இத்தலைவர் நயந்தா ரல்லர்,

  • நடுவிகந்த ஆக்கத்தை வேண்டேன் வேண்டேன்

நடுவொரீஇ அல்லசெய ஒவ்வேன் ஒவ்வேன் கெடுநிலைமைக் கேகாதீர் ! நன்றே செய்வீர் ! கிளந்தவெலாம் மறப்பதுவோ?’ என்றே சொன்னர் (Dஎ) 50