பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தித்துச் சீர் துாக்கிச் செப்புகிற நல்லுரையை வந்தித்துப் போற்றி வரவேற்க வேண்டுமடி ! " ஆள்கின்ற நாமே அறிஞரிவர் சொற்கேட்டால் தாழ்வன்ருே ? - என்னும் தவருண எண்ணத்தால் புத்துலகம் காண் பதில்லை ; புற்றுலகங் காட்டிவிடும் தத்தை மொழி ! என்றேன் ; தடுத்து நிறுத்தி, " அறிஞர் புகழ்பாடல் ஏனத்தான் ? நன்ருய்ப் புரியும் படியாய்ப் புகன்றிடுவீர் என்றுரைத்தாள் ; வானெலியார் கட்டளை கண்ணழகி 1 வானெலியார் கட்டளே தான். புத்துலகம் பண்ணுதற்கு நல்லறிஞன் பாவல்லான் விஞ்ஞானி ஏருழவன் வாணிகன் இத்தகை யார் தம் பங்கில் பேரறிஞன் பங்கிசைக்கப் பேணிக் கொடுத்த தல்ை பாடுகின்றேன் என்றதும், அப் பாவை விழி சிவந்து, " நாடு புதுமைபெற நங்கையரைத் தள்ளிவிட்டீர் ! புத்துலகில் பெண்ணேப் புதைத்துவிட்டீர்!’ என்றெழுந்தாள்; இத் தவறு நானே இழைத்தேன் ? கனிமொழியே ! எய்தவனே நோகா தெனேக் கடிந்தாய் ! வாைெலியார் செய்தபிழைக் கென்செய்வேன் ? சேயிழையே! சற்றுக்கேள்! அறிஞன் இல்லா அரசு பொற்சிலம்பை விற்கவந்த பூம் புகார்க் கோவலனைப் பொற்கொல்லன் சொற்கேட்டுப் பொல்லாக் கொலைசெய்து பாண்டியன் செங்கோல் பழுதுபடக் காரணமென் ? ஆண்டோர் அறிஞனிலாக் காரணமே ஆகும் ; அரசியலில் அறிஞர் அறிவுடையோன் நல்லா (று) அரசேகின் நல்ல நெறியுடைய நாடாகும் நேரிழையே முன் பிருந்த 66