உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் குணமும் உயர்ந்த ஒரு தாய்வ யிற்றில் உடன்பிறந்த கோவிந்த சாமி என்போன் தன் குணமும் சீர்துாக்கிக் காணுங் காலைச் சரியாக நிறை காட்ட முடிய வில்லை; உன்குணமும் அவன் குணகும் ஒன்றை யொன்று விஞ்சுவதால் உணர்ந்தறிய இயல வில்லை ; நன்கொடையும் உயர் பண்பும் குடிப்பி றந்த நல்லோர் க்கு வாய்க்கின்ற இயல்பு போலும் (a) ஈகை மனம் பெற்றவனே ! அறுபான் ஆண்டை எய்துகின்ற இந்நாளில் நின்னே நாங்கள் வாகைபெறும் பெரியா ராய்க் கானு கின் ருேம் , மருத்துவத்துக் கலைஞர் த மைக் கருப்பஞ் சாற்றுப் பாகைநிகர் செந்தமிழில் பாடல் நல்கும் கவிஞர்தமை இலக்கியத்தில் தோய்ந்தெ ழுந்து மேகமெனச் சொல்பொழியும் அறிஞர் தம்மை மேலாக்கி மகிழ்ந்தவன் நீ அண்ணு !! வாழ்க ! (க) சில மிகு சான் ருேனே ! நின்னி டத்துக் சில குறைகள் நான் கண்டேன் கூறு கின்றேன் ; ஞாலமிசைத் திருக்குறளே ஓங்க நெஞ்சில் நாடுகிருய் ! தமிழொன்றே போற்று கின் ருய் ! கோலமொழித் தமிழ்நெஞ்சங் கொண்ட வர்க்கே கொடுக்கின்ருய் ! குறைகாணின் கடிந்து ரைப்பாய் ! மேலுமெ8னப் போல்வார்க்கும் பணிந்து நிற்பாய் ! மேலோனே கணக்கறியாய் ஈயும் போது ! (ίο)