பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனெனப் பேர் சொன் ல்ை போதும் நம்மோர் கால்நடுங்கும் கை நடுங்கும் துடிப்ப டங்கும் மேலனைத்தும் வியர் வரும்பும்; மனிதன் பண்பாம்; வீரமிகும் நெஞ்சுடையான் அஞ்சான் கூற்றைக் காலனெனும் பேரானைக் கூவி, ' உன்னைப் புல்லெனவே கருதுகின்றேன் வாடா என்றன் காலருகே மிதிக்கின்றேன் - என்று ரைத்த கவிவீரம் நினைப்போர்க்கு வீரம் ஊட்டும் (ίδα ) அச்சமிலான் பாண்டவரில் மூத்தவனும் தருமன் தன்னைப் பண் புடையான் அறமுட்ையான் என்று சொல்லி ஆண்டவனுய்ப் போற்றுகின் ருர்; அவனி ழைத்த பெரும்பிழையை ஆர் சொல் வார் ? அஞ்சு கின் ருர்; ' தீண்டரிய சூதாடிப் பணயம் என்று தேயத்தை வைத்திழந்தான்; சீச்சி நாட்டை ஆண்ட இவன் சிறியர் செயல் செய்தான் ' என்றே அரசுமுறை பிழைத்தமையை வீரன் சொன்னன் (கை) சாதிப் பூசல் * சாதியினல் தாழ்வுயர்வு பேசிப் பேசிச் சாத்திரத்தை வேதத்தைச் சான்று காட்டிப் பாதியில் நாம் படுகுழியில் வீழ்ந்து விட்டோம் பறையனென்றும் குறவனென்றும் பார்ப்பான் என்றும் ஆதியிலே இல்லாத பழக்கந் தன்னை அணுகவிட்டோம் அடிமையுற்ருேம் மிடிமைப் பட்டோம் ஆதலினல் சாதியினே ஒழிக்க வேண்டி "ஆடுவமே' எனும் பாடல் பாடித் தந்தான் (ίΌσ') 94