பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சர்வா கனி சர்வா ஊர்வ கனி சர்வா கனி கவியின் கனவு உம். சரி. வேந்தே திருமணம் முடிந்து விட்டது. நாட்டிய மண்டபத்துக்குப் புறப்படலாம். நீங்கள் ஆகவேண்டிய ஏற்பாட்டைச் செய்யுங்கள். (வேந்தன் பே7கிறான்) (துயரமும் துணிவும் கோபமும் சேர்ந்தெழ) நில்லுங்கள் வேந்தே பெரியோர்களே! போர் முகத்தில் எனது தமையனார் உங்கள் சேனாதிபதி, நெருக்கடியான நிலையில் எதிரிகளைச் சமாளிக் கிறார். அவர் வர இயலாமைக்குத் தம் வருத்தத் தைக் கூறச் சொன்னார். இதோ, அவரது வாழ்த்திதழ். "பகைவர்களது கொடியைப் பார்த்த வண்ணம் எழுதுகிறேன். இளவரசியார் திருமணம் இனிது நிறைவேறட்டும். அவசரத் திருமணம் அழகாக வாழ்க! சேனாதிபதி சுகதேவன்” (வாழ்த்திதழை இளவரசியின் கையிலும், இரு மாலைகளை மணிவண்ணன் கழுத்திலும் போடுகிறாள். சபையில் சிரிப்பு, மணிவண்ணன் மற்ற மாவைகளைக் கீழே தள்ளிவிட்டுக் கனிமொழி தந்த மாலையை அன்புடன் போட்டுக் கொண்டதைக் கண்ட ஊர்வசியும் சர்வாதிகாரியும் வெகுண்டு) பெண்ணே அனுபவமற்ற சிறுமி என்பதை உன் அற்பத்தனத்தால் காட்டிவிட்டாயே! பெரிய விபரீதத்தைச் செய்துவிட்டாளே! என் கடமையை நான் செய்தேன். எனது இலட்சியம் நிறைவேறிவிட்டது. சேனாதிபதியின் தங்கை என்பதால் உன்னை மன்னித்தேன். இல்லாவிட்டால் என்னை என்ன செய்ய முடியும்?