உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காசி மாஹாத்மீயம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி மாஹாத்மியம்.

                               ௧௧

வீழ்ந்து . நமஸ்கரித் கெழுந்து அவரை நோக்கி, வீணாதரரே ! முநிபுங்கவரே ! உமது பாத பதுமத்தை யான் ஈண்டுக் காண்பதனாலேயே எனக்கு எல்லா நன்மையுங் கைகூடின. எனது துக்கமெல்லாம் ஒழிந்தன. நான் மக்கட் பேறடைய யாதோர் ஐயமும் இல்லை. புண்ணிய புருஷர்கள் ஒருவன் திருஷ்டியிற் பட்டபோதே நன்மைகளெல்லாம் அவனை நாடிவரும். இன்று தான் பரிசுத்தனாயினேன்; மிகப் பிரகாசிக்க சிம்ஹள தேயத் தரசர்களுள் மிக்க நிலை பெற்றவனாயினேன். ஹே! மந்தாரலக்ஷ்மி ! இங்கே வா! முநிபுங்கவரது பாத தாமரையைச் சிரசிற்றரித்துக்கொள். இவரோ திவ்யர். மஹா முநி வர். பிரம புத்திரர். நினைத்த காரியத்தை நிமிஷத் தில் முடிக்க வல்லவர். இவர் கடாக்ஷம் பெற்றாய்; புத்திரப்பே றுற்றாய் எனப் பலவாறு கூறி, முநி புங்கவரைப் பணித்துநின்றான். இவ்வார்த்தைகளைச் செவியேற்ற ஸ்ரீநாரத முநி வர் சந்திரிகை போலும் ஒளி பொருந்திய புன்சிரிப்போடு அமுத வாயைத் திறந்து, பூபதே ! நீ ஸ்ரீநீலகண்டப் பெருமானைப் பூசித் தல் வேண்டும். அவரே தேவாதி தேவர், மூவர்கள் முதல்வர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க் கினியர். அவரை வழிபட்டால் உனக்கு மங்களம் உண்டாகும். உனது பூர்வ கர்ம வினையால் உனக்குச் சந்ததி யில்லா தாயிற் று. நீ முன் ஜன்மத்தில் அந்தணருடைய பொருளை மோசஞ் செய்து கவர்ந்தாய்.உன் முற்பிறப் பின் வரலாற்றைக் கூறுகின்றேன்; கேட்பாயாக!