பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணமா? வெறுமணமா?

25



தில்லை என்று திட்டமாகக் கூறிவிட்டனர். நான் அவ்வாறு படிப்பதாயின் பண உதவி தரமுடியாது என்றும் சொல்லி விட்டனர். எனவே அந்த வயதில் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதென்பது என்னால் முடியவில்லை. அதே வேளையில் என் மணம் பற்றிய ஊரார் ஏச்சும் பேச்சும் எனக்கு வேதனை தந்தன. அன்னையாரும் அந்த வேதனையைப் பெற்றார் என்றாலும், நான் அவரைவிட்டுப் பிரியக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தனர். அப்போதுதான் சிதம்பரத்திலிருந்து 'பிரகாசானந்தா' என்ற துறவி எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்.

அவர் ஊரில் வந்து சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது பலர் அவரிடம் நெருங்கிப் பழகினர்கள். முதியரும் இளையரும் அவருடன் பழகினர். நான் ஏனோ சற்றே விலகியே இருந்தேன். அவர் உண்மையில் துறவியாக இருந்ததோடு நன்கு பயின்றவராகவும் இருந்தார். அவரை ஊரில் ஒவ்வொருவரும் ஒருநாளைக்கு ஒருவேளை தத்தம் வீட்டில் உணவருந்த அழைத்தனர். அப்படியே என் அன்னையும் அவரை என் வீட்டில் உணவுக்கு அழைத்திருந்தனர். அவர் வீட்டில் கால்வைத்த வேளையே என் வாழ்வுப் பாதையின் திருப்பு மைய வேளையாக அமைந்தது என்பதை அப்போது நான் அறியேன்.

என்னிடம் நேராகப் பேசாவிடினும், அவர் மற்றவர்களிடமிருந்து என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற்று, மேலே படிக்க விரும்பினாலும் வாய்ப்பின்றி இருப்பதை அறிந்தார். எனவே அவர் வீட்டிற்கு உணவு கொள்ள வந்த காலை, என் அன்னையாரோடு என்னைப் பற்றிப் பேசினர். என்னிடமும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து என் உள்ள நிலையினையும் புரிந்துகொண்டார். அவருக்கு, நான் பிற்காலத்து உயர்ந்து வாழ்வேன் என்று புலனாயிற்று என்றார். எனவே எனது மேல் படிப்புக்கு என் அன்னையாரிடம் அவரே வாதாடினர் மேலும் வீட்டில் இருந்துகொண்டே-அன்னையார் விருப்