பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணமா? வெறுமணமா?

27


வுக்குப் பிறகு, நான் கல்லூரியில் சேர்ந்தே படிக்கவேண்டும் என்ற நிலை உண்டாயிற்று.

நூல்களைப் பெற்று உரிய விண்ணப்பங்களையும் அனுப்பிய பிறகுதான் நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். பள்ளியில் பயிலும்போது கணக்கில் சிறந்தவனாக இருந்தேனேயன்றி, தமிழில் சாதாரண மாணவனாகவே இருந்தேன். எனவே தமிழை நன்கு தெளியக் கற்கமுடியவில்லை. என்றாலும் சில காலம் எங்கள் ஊரிலேயே தங்கிய அடிகள் சில பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். தேர்வுக்கு முன் சில நாட்கள் சிதம்பரம் சென்றால் அங்கே மடத்தில் தங்கிப் பயிலலாம் என்றார்கள். எப்படியோ அவர்வாய்மொழி கேட்டும் அவர் காட்டிய வழியைப் பின்பற்றியும் அந்த நுழைவுத் தேர்வில் சிறக்க எழுதி வெற்றி பெற்றுவிட்டேன். எனவே அடுத்த ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில வேண்டும். அன்னை அதற்கு முதலில் இணங்கவில்லை என்றாலும் முடிவில் இசைவு தந்து வற்றாத கண்ணீருடன் என்னை வழியனுப்பினர்கள். நானும் சிதம்பரம் சென்று தமிழ் மாணவனாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கால்வைத்துப் பயிலத் தொடங்கினேன்.