பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. இந்துமத பாடசாலை

பள்ளிப் பணி

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைவிட்டு வீட்டிலேயே இருப்பது பற்றி என் அன்னை மிகவும் மகிழ்ந்தார்கள். பெரிய அன்னையும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். ஆனால் பெரிய தந்தையார் மட்டும் எப்படியாவது தொட்டதை முடித்துவிடுதல் நல்லது என்றார்கள். எனினும் அப்போது நான் மேலே படிப்பதைப் பற்றி ஒன்றும் முடிவு செய்யவில்லை. என் மணவாழ்வு அப்போதும் அப்படியே யாதொரு மாறுபாடும் இன்றி ‘சந்நியாசி’ வாழ்வு போலவே அமைந்திருந்தது. அது என் அன்னையர் இருவர் உள்ளத்தையும் அதிகமாகக் குழப்பிற்று. எப்படியும் எனக்கு மறுமணம் செய்விக்க வேண்டும் என முயன்றனர். அதுபற்றி யெல்லாம் கவலைகொள்ளாது எனது மாமியார் வீட்டில் அவர்கள் போக்கில் இருந்தனன. வேண்டுமானால் அவளை, அவள் விரும்பினவன் மணக்க விரும்பினால், மறுமணம் செய்து கொடுக்கப்போவதாக மாமனார் பலரிடம் கூறிக் கொண்டிருந்தார். நான் உண்மையில் ஒருபுறம் வருந்தினாலும் ஒருபுறம் மகிழ்தேன். பாவம் அவரவர் விரும்பியவரை மணந்துகொண்டு வாழ வழியற்ற சமுதாயத்தில் இவ்வளவு முன்னனேற்றமுடைய ஒருவர் கிராமத்தில் இருக்கிறார் என்றால் போற்றவேண்டியது தானே.

இதற்கிடையில் ஒரு நாள் வாலாஜாபாத் சென்றேன். அங்கே நான் பயின்ற இந்துமத பாடசாலை நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. அதன் அமைப்பாளர் திரு. வா. தி.மாசிலாமணி முதலியார் அவர்கள் என்னைக் கண்டார்கள். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் எனக் கேட்டறிந்து, ‘சும்மா’ இருப்பதால் அப்பள்ளியல் வந்து பணியாற்றுமாறு சொன்-