பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துமத பாடசாலை

55


விட்டனர். யார் தடுத்தும் கேளாமல் தானே நேரில் வந்தாலன்றி நான் மனம் மாறமாட்டேன் என்றும் மணம் முடிந்துவிடுமென்றும் அதை எப்படியும் தடுக்கவேண்டும் என்றும் புறப்பட்டு விட்டார்கள். அவர்களுக்குத் துணையாக எனது பெரிய தந்தையும் புறப்பட்டனர். எப்படியோ அஞ்சல், ரெயில் நிலைய அதிகாரிகளைக் கொண்டு அந்த ஊரையும் வழியையும் அறிந்து, மறுநாட்காலை அந்த ஊருக்குச் சென்று இருவரும் சேர்ந்தனர்.

குணமங்கலம் அழகான சோலை சூழ்ந்த சிற்றூராம் அதில் அனைவரும் வேளாளரே வாழ்கின்றார்களாம். இவர்கள் சென்று அங்குள்ளவர்களை அப்பத்திரிகையைக் காட்டி, அத்தகைய திருமணம் ஏதாவது நடைபெறுகின்றதா எனக் கேட்டார்கள். அங்கேயும் என் அன்னயார் அழுத வண்ணமே இருந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்துச் சென்று ஆறுதல் சொல்லி மோரும் பழமும் பிறவும்கொடுத்து உண்ணச்செய்து பிறகு எல்லாத் தகவல்களையும் கேட்டறிந்தார்களாம். அங்குள்ளவர்களும் எங்களைப் போன்றே வேளாளர்கள் தாம், எனினும் சிறுவேறுபாடு இருக்கும் போலும், அவர்களும் வைதிக நெறிபற்றியவர்கள்போலும். ஆனால் பின் இருவரும் ஒரே இனத்தவர்தாம் என உணர்ந்தோம். அத்தகைய திருமணம் செய்ய அந்த ஊரில் யாருமே நினைக்கமாட்டார்கள் என்றும் ஊரில் அவ்வளவு கட்டுப்பாடு உண்டு என்றும் பத்திரிகையில் உள்ளமை போன்று பெண்ணோ அவள் அண்ணனோ கிடையாது என்றும் கூறியதோடு, ஒருவேளை அடுத்து அத்தகைய மணம் ஏதேனும் நடந்தாலும் தாங்கள் நடக்க ஒட்டாத கொள்கை யுடையவர்களென்றும் கூறி, அன்னையாரைக் கவலை கொள்ளாது செல்லுமாறு வழியனுப்பிவைத்தார்களாம். அவர்கள் அன்பில் திளைத்த அன்னேயாரும் வேற்றுடம்பு திரும்புவது போன்று, என்னைக் காணுமையால் வந்தவழி திரும்பினார்கள்.