பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

காஞ்சி வாழ்க்கை


 விடுமாறும் கூறினர். அதற்கென விண்ணப்பமோ உத்தரவோ தேவை இல்லை என்றார்,

எனினும் எனது நியமனத்தில் சிறிது சிக்கல் ஏற்பட்டது எனப் பின்னால் அறிந்தேன். அந்த ஆண்டிலேயே நான் பயின்ற செங்கற்பட்டுக் கிறித்தவப் பாடசாலையிலும் ஒரு தமிழாசிரியர் பதவி காலியாகி இருந்தது. அதன் தலைமை ஆசிரியர் திரு. 'ஜோப்' என்பவர். ஆண்டர்சன் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. 'ஞானாதிக்கம்' அவர்கள். இப்பள்ளிகளுக்கெல்லாம் நியமனங்கள் ஒரே குழுவினாலேயே நடைபெறும். சில ஆங்கிலேயரும் மூன்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் அதில் உறுப்பினர்போலும். எனது நியமனம் பற்றிய பேச்சுத் தொடங்கியதும் 'ஜோப்" என்பார், 'அவன் என் மாணவன், ஆகவே அவனை நானே எடுத்துக் கொள்வேன்’ என வாதிட்டாராம். ஆனால் ஞானாதிக்கம் அவர்கள் 'அவன் என் வட்டத்தைச் (காஞ்சிபுரம்) சேர்ந்தவன்; மேலும் நான்தான் அவனை வரவழைத்து எல்லா ஏற்பாடும் செய்தவன், எனவே நான் விடமாட்டேன்’ என்றாராம். இருவரும் சுமார் பதினைந்து நிமிடம் வாக்கு வாதம் செய்தார்களாம். பிறகு ஆங்கிலேயர் தலையீட்டால் முன்னரே முயன்ற ஞானதிக்கத்தின் சொல் வென்றதாம். இதை இருவரும் பிறகு என்னிடம் சொல்லித் தட்டிக் கொடுத்து வாழ்த்தினர். இருவரும் வயதானவர்கள்-எனவே அவர்களுடைய மகனைப் போன்று இருந்தமையின் இருவரும் என்ன வாழ்த்தினர். காஞ்சியில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில் இவ்வாறு முதலாவதாக என் முறையான தமிழ்ப் பணி தொடங்க ஏற்பாடாயிற்று.

நான் அதுவரையில் கிராமத்தில் சாதாரண நிலையில் இருந்தவன். இந்துமத பாடசாலையில் பணியாற்றியபோதும் அது என் வீடெனவே நின்றது. எனவே அதுவரை உத்தியோகத்துக்கெனத் தனி உடையோ பிற ஆடம்பரங்களோ தேவை இல்லாதிருந்தன. சாதாரண 'ஜிப்பா' அணிந்தே