பக்கம்:காதலா கடமையா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 15



(“குருந்து படர்முல்லை
பெருந்தேக்கிற் சென்று பொருந்துதல் இல்லையோ?”)


இடம்
கொன்றை நாட்டின்
முன்னாள்
அரண்மனை.
உறுப்பினர்
தங்கவேல்,
கிள்ளை,

மாழைப் பேரரசு.


ன்னால் தடையோ எழில்விடு தலைக்கே?
சொன்னால் நலம்” எனத் தோகை கேட்டாள்.

“கிள்ளையே உன்னால் கெடுதலை இராதுதான்.
அள்ளக் குறையா அழகும், இளமையும்,
வைய மாட்சியும் எய்திய மன்னன்,
தையல் உன்னிடம் தனிமையிற் பேச,
வாயிலின் புறத்தே வந்துநிற் கின்றான்,
தூயோய் வருகெனச் சொல்லுக” என்று
தங்கவேல் கெஞ்சினான். மங்கை ஒப்பினாள்
அங்கது தெரிந்தே அரசன் வந்தான்.

இருக்கை காட்டினாள். இருந்தான் அரசன்.
முருக்கிதழ்க் கிள்ளையும் முனைவேல் அரசனும்
தம்மில் பேசினார். தங்கவேல் மறைந்தான்.

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/52&oldid=1484515" இலிருந்து மீள்விக்கப்பட்டது