உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதலா கடமையா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 28



("ஒருவீட்டுக்குள் ஒரு குழந்தைதன்
மரப்பாவை கடித்து வாய்நொந் தழுதது")


இடம்
கொன்றை நாட்டின்
வீதிகளும், வீடுகளும்.
உறுப்பினர்
கொன்றைநாட்டு
மக்கள்.


வீதியில் மாழையான் விட்ட படையன்றி
நாட்டினர் எவரும் நடத்தல் இல்லை.
வீடொவ் வொன்றும் வெஞ்சிறை விடுதி,
விடுதி தோறும் படுதுயர் மக்கள்,
பசிஎன அழுகுரல் பாய்ச்சி யிருந்தனர்.
அரிசி யில்லை, ஆவன இல்லை.
புரிவ தொன்றும் புரிந்தபா டில்லை
குழந்தைகள் வீட்டில் புழுவெனத் துடித்தனர்
எழுந்த நிலாமுகம் எரிந்தனர் மங்கைமார்!
தின்பன வாங்கத் தெருவில் வந்தாரை
முன்னின்று தீயர் முகத்தில் அறைந்தனர்.
“சாகின்றோமே சாகின்றோமே
வேகின்றோமே விடைகொடும் ஐயா”

81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/82&oldid=1484390" இலிருந்து மீள்விக்கப்பட்டது