பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - காலத்தோறும் தமிழகம் மேலைச் சாளுக்கிய சயசிம்மன் என்பவன், சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த வடபுல நாடுகளின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அஃதறிந்த இராசேந்திரன் பெரும் படையுடன் வடநாடு சென்றான். மு.சங்கியில் கடும் போர் நடைபெற்றது. இறுதியில் வாகை சூடிய சோழர்படை. இழந்த நாடுகளை மீட்டுக் கொண்டதோடு, பெரும் பொருட்கு வியலையும் கொள்ளை கொண்டு நாடு. திரும்பியது. கி. பி. 1042-ல் மேலைச் சாளுக்கிய சயசிம்மன் இறக்க,. ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட அ வ ன் மகன் சோமேசுவரன் எனப்படும் ஆகவமல்லன், துங்கபத்திரை ஆற்றுக்குத் தெற்கே, சோழர்க்கு உரியதாக இருந்த சில நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டான். அஃதறிந்த இராசேந்திரன், தன் மகன் இராசாதிராசனை, மேலைச் சாளுக்கியரை வென்று அடக்கி வருமாறு பணித்தான் அவ்வாறே, படை கொண்டு சென்ற இரசாதிராசன் சாளுக்கிய படைத்தலைவர் பலரைக் கொன்றும், ஆகவ மல்லன் மக்களைக் காடு புசு ஒட்டியும், கொள்ளிப்பாக் கையை எரியூட்டியும், ஆகவமல்லனின் கொற்றம் குலையச் செய்து வெற்றித் திருமகளை மணந்து சோணாடு திரும்பினான். முதலாம் இராசாதிதாசன் மேலைச் சாளுக்கியர்களை முற்றிலும் வென்று, அவர்களைத் தமக்கு அடங்கிய குறுநிலத் தலைவராகச் செய்தல் வேண்டும் என்பதே சோழர்களின் நினைவாதலின் முதலாம் இரசாதிராசன், சோழர் அரியணை ஏறிய பின்னர் கி. பி. 1046ல், சாளுக்கியர் மீது இரண்டாவது முறையாகப் போர் தொடுத்துச் சென்று, கண்டர் தினகரன் உள்ளிட்ட பல படைத் தலைவர்களை வென்று, கம்பிலி நகரத்தில் இருந்த சாளுக்கிய மாளிகையைத் தகர்த்து எறிந்துவிட்டு,