பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிருவாகம் - அன்றும் இன்றும் காலிங்கராயன் காலத்தில் கால்வாய்ப் பராமரிப்புக்குக் கொங்கு நாட்டில் காலிங்கராய வினியோகம்' என்ற வரி வசூலிக்கப்பட்டது. சோழநாட்டில் இதுபோன்று 'காவிரிக் கரை வினியோகம்' என்ற வரி வாங்கப்பட்டதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஆங்காங்கு இருக்கும் ஊர்ச்சபைகள் கால்வாய்க் கரை களின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் கவனித்துக் கொண்டன. அந்தந்தப் பகுதி விவசாயிகளே தங்கள் பகுதிக் கால்வாயைக் கண்காணித்துக் கொள்ளும் 'குடி மராமத்து முறையும் சில காலங்களில் இருந்தது. பரம்பரைத் தொழிலாளர் பணியமர்ந்து கால்வாயைக் கண்காணிக்கும் வழக்கமும் இருந்தது. கால்வாய் நீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமைக் காகவும் கால்வாய்ப் பராமரிப்புக்கும் பழங்காலத்தில் பெல்லாகத் தீர்வை வசூல் செய்யப்பட்டது. நெல்லாக அப்பதில் பல குறைகளும் சமச்சீரின்மையும் காணப்படவே தீர்வை காசாக நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது ஊரவை, நாடு, அரசுப் பங்குக்குக் காசாகக் கொடுக்கப் பட்ட பின்பும் கூட உள்ளூர்க் காவல்காரர், தலையாரி போன்ற கீழ்நிலை அலுவலர்கட்குத் தானியமாகவே கூலி கொடுக்கப்பட்டது. இவ்வாறு வசூல் செய்யப்பட்ட தீர்வை, நிலங்களின் தரத்திற்கு ஏற்ப அமைந்திருந்தது. பாசனப் பகுதியில் நன்செய்க்கு 212 ரூபாயும் ன்செய்க்கு 131 ரூபாயும் மானா வரிக்கு 123 ரூபாயும் வரியாகும். இப்பொழுது வேறுபாடு இன்றி எக்டேருச்கு (2.47 ஏக்கர்) 551 ரூபாய் வசூலிக்கப் படுகிறது. - க.-7 |