பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

145) தயவு கோரியிருக்கும் நாளையில் சித்தார்த்தி வருஷத்திலே மகாராஜ ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேஜர் கமாண்டர் இன்சீபு (ஜேம்சு) ரமலி சாயபு அவர்கள் மஹா ராஜராஜஸ்ரீ பெம்பாயி பவுசுதார்களுக்கு யெல்லாம் பெரிய சேர்வை துரைகளாகிய இற்றியொட்டு சாயபு அவர்கள் மகாராஜராஜஸ்ரீ செண்டறல் அட்டலி சாயபு அவர்கள் மேல் எழுதப்பட்ட துரையள் என் பேரிலே கடாட்சம் செய்து வந்த படியினாலே நானும் துரையள் கடாட் சயத்தும்படி நடந்து கொண்டு வந்தவனாய் இருந்தபடி யினாலே என்னிடத்திலே பூரண தயவாகக் கடாட்சம் பண்ணிக் கொண்டு வந்தார்கள். மகாராஜராஜஸ்ரீ கும்பினி துரையள் கடாட்சம் செய்து யென் மான மரியாதிகளைப் பரிபாலனம் பண்ணி ஊத்துக் குழிக்குச் சேர்ந்த ஒன்பது கிராமமும் கண்டு முதலான பேரீஜுலே சாதலவார் சிப்பந்தி தவிர பத்தில் மூணு பாளை யக்கார மிறாசு பத்தில் மூணு சாரி செய்துயிருக்கிறபடி யினாலே சாதலவார் சிப்பந்தி தவிர பத்தில் ஏழு சருகாருக் குச் செலுத்திக் கொண்டு யென் பட்டத்து ஆயுதங்கள் தயவு செய்து இருக்கிறபடியினாலே ஊற்றுக்குழி பாளையக்காரர் என்ற பேராய் இருக்கிறேன். மகாராஜராஜஸ்ரீ கும்பினி துரையவர்கள் கடாட்சத்துக் குப் பாத்திரனாய் குமாரசாமி காலிங்கராயக் கவுண்டன் என்கிற பேர் உள்ளவனாய் என் வம்ச பரம்பரையிலே சம்ரட்சணை பண்ணப்பட்டவாளுடைய சந்ததியிலே சேரப் பட்ட அடுத்த சனம் சயிதமாய் முந்நூறு ஜனத்துக்கு அஹமனனியானியாய் காலட்சேபத்துக்கு மார்க்கமாய் நடப்பிவிச்சுக் கொண்டு துரையள் கட்டளையிட்டபடிக்கு நடந்துகொண்டு மஹாராஜ ராஜஸ்ரீ கம்பெனி துரையள் கடாட்சத்துக்குப் பாத்திரனாக இருக்கிறேன். ஊற்றுக்குழி காலிங்கராயக் கவுண்டன் ருசு 25 பங்குனி விஷூ