பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

17 வெள்ளோட்டில் வாழ்ந்த தெள்ளுதமிழ்ப் பாவலர் குந்தாணி சுவாமிநாதக் கவிராயர்தான் 'சென்னிமலை யாண்டவர் பிள்ளைத் தமிழ்', 'நல்லண்ணன் காதல்' போன்ற நூல்களைப் பாடியவர். 'வாலசுப்பப்புலவன்' என்பவர் ஒருவர் இங்கு வாழ்ந்ததாகக் கொங்கு மண்டல சதகம் மூலமாக அறிகின்றோம். இவ்வூரருகே புலவர் பாளையம் என்ற ஊர் ஒன்றுள்ளது. இராசாக்கள் அம்மானை, பாடகவல்லி பதிகம், குப்பணன் நீதிச்சதகம் என்பன இங்கே பாடப்பட்ட நூல்களாகும். தலைவர்கள் வெள்ளோட்டில் சாத்தந்தை குலத்தில் நஞ்சையன், காலிங்கராயன், காசிலிங்கக் கவுண்டர், கொழந்தவேல் கவுண்டர், முத்தித்திருமலைக் கவுண்டர், ராசாக்கவுண்டர், நல்லண கவுண்டர், முதலியாக் கவுண்டர், பயிரகுலத்தில் குப்பண கவுண்டர், பழனிக் கவுண்டர் போன்ற பல வள்ளல்கள் வாழ்ந்து ஆலயத்திருப்பணி செய்தும் அருந்தமிழ் வளர்த்தும் புலவர்களைப் பேணியும் பணிகள் பல புரிந் துள்ள னர்.