பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிறப்புப் பெயரையுடைய மணவிற்கூத்தனுக்குக் 'காலிங்க ராயன்' என்ற பட்டத்தை அளித்தான். கலிங்க வெற்றியின் அடையாளமாகவே குலோத்துங்கன் இவ்வாறு பட்டப் பெயரை அளித்தான். இம் மணவிற்கூத்தனைத் தில்லைக் கல்வெட்டுப் பாடல் 'காலிங்கர் ஏறு' என்று பாராட்டு கின்றது. காலிங்கராயர் பட்டம் பெற்ற முதல் அரசியல் தலைவர் மணவிற் கூத்தரே ஆவார். தென்கரைச் சோழவந்தான் மூலநாதர் கோயில் கல்வெட்டில் சீவல்லவன் அழகிய மணவாளனான கலிங்க ராஜன்' என்ற ஒரு பெயர் காணப்படுகிறது. கலிங்கராஜன். காலிங்கராயன் என மாறியிருக்க வேண்டும். (தமிழ் இலக்கண முறைப்படி சொல் இடையில் உள்ள ஜ-ய என்று மாறும். பங்கஜம் - பங்கயம்; புஜம் - புயம்) இப்பெயரோடு தொடர்புடைய 'கலிங்க தரையன்' என்ற பெயரும் கல்வெட்டுக்களில் பயின்று வருதலைக் காண்கின்றோம். குலோத்துங்கனுடைய கலிங்க வெற்றிக்கு முன்னர்த் தமிழ் நாட்டு அரசியல் அதிகாரிகள் எவரும் காலிங்கராயன் என்ற பெயரோடு இருந்ததில்லை என்பதை நோக்கக் கலிங்க வெற்றிக்குப் பின்னரே இவ்வாறு பட்டப் பெயர் அளிக்கும் வழக்கு வந்தது என்ற உண்மை புலனாகும். குலோத்துங்கனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த சோழர்களில் பலரும் பாண்டியர்களும் விசயநகர அரசர்களும் போசளரும் (ஒய்சளர்) தொண்டை நாட்டுச் சம்புவராயர் மரபினரும் இப்பெயரைத் தங்கள் அரசியல் அதிகாரிகட்கு வழங்கியதி லிருந்து கலிங்க நாட்டு வெற்றியிலும் காலிங்கராயன் என்ற பெயரிலும் பிற்காலத்தவர் கொண்டிருந்த பெருமதிப்புப் புலனாகின்றது. பலர் 'காலிங்கராயன்' என்ற பெயரைக் 'காளிங்க ராயன்' என்று எழுதி வருகின் றனர். எந்த ஒரு பழைய ஆவணத்திலும் அவ்வாறு எழுதப் பெறவில்லை. அவ்வாறு எழுதுவது பிழையானதும் வரலாற்றுக்கு மாறுபட்டது மாகும்.