பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

29) னால் ஓர் அலுவலர் பெயர் 'காலிங்கராஜன்' என்றிருப்பதை அறிகின்றோம். திக்கெலாம் புகழ் பரப்பும் திருநெல்வேலி நெல்லை யப்பர் கோயிலில் மூன்றாம் பிரகாரம் வடக்குச் சுவரில் உள்ள குலசேகர தேவனின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் நெட்டூருடையான் திருவிருந்தான் காலிங்க ராயன்' என்ற அரசியல் தலைவர் குறிக்கப்பெற்றுள்ளார். மிழலைக்கூறு நடுவிற்கூறு பராந்தக நல்லூர் ஆன கட்டிக்குறிச்சியிலும் 'காலிங்கராயர்' என்ற பெயரைக் காணுகின்றோம். மலர்ந்த சீர்மாட மதுரைச் சுந்தரேசவரர் கோயிலுக்குத் திருவிழா நடத்த நிவந்தம் விட்ட பலருள் 'முத்தூற்றுக் கூற்றத்துக் கப்பலூரான உலகளந்த சோழ நல்லூர் கரிய மாணிக்காழ்வான் திருவுடை நாயகரான வீரபாண்டியக் காலிங்கராயர்' என்பவர் சிறப்பாகக் குறிக்கப்பெறுகின்றார். ஒய்சளர் காலத்தில் கொங்கு நாட்டுக் குன்னத்தூர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஒய்சள நாட்டு மன்னன் வீரவல்லாள தேவன் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் உடையாண்டான் அழகப்பெருமாள் பிள்ளையாண்டானான காலிங்கராயன் என்ற குறுப்பு நாட்டு அரசியல் தலைவன் ஒருவன் குறிக்கப் பெறுகின்றான். விசயநகர ஆட்சியில் திருவரங்குளம் அரிதீர்த்தேசுவரர் கோயிலில் உள்ள வீர அச்சுதராயர் கல்வெட்டில் (கி. பி. 1531) செவந்தி காலிங்கராயன்' என்பவரும் பிரான்மலை மங்கை நாதேசுவரர் கோயிலில் உள்ள கிருட்டிண தேவராயன் காலத்துக் கல்வெட்டில் ' அறந்தாங்கிக் கணக்கு அடியார்க்கு