பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

37 பூந்துறை நாட்டில் பாயும் நான்கு ஆறுகளில் இரண்டா வதாக வானியாற்றை வைத்துப் பாடுகின்றார் சென்னிமலை யாண்டவர் பிள்ளைத்தமிழ் நூலாசிரியர் குந்தாணி சுவாமி நாதக் கவிராயர். 'சரசகாவிரி வானி காஞ்சி அனுமையும் சதுர்வித நதி' என்று கூறும் அவ்வாசிரியர் மற்றோர் இடத்தில் வானியாற்றைத் 'தெய்வ வானி' என்றும் குறிப்பிடு - கின்றார். சிந்தையள்ளும் சந்தக்கவிகள் பாடிய அருணகிரிநாதர் பவானியில் எழுந்தருளியுள்ள முருகனைப் புகழ்ந்து பாடும் போது "சிலைவேட சேவற் கொடியோனே திருவானி கூடற் பெருமாளே” என்பார். பவானியைத் திருவானி கூடல் என்றழைக்கின்றார் அருணகிரியார், 'செஞ்சொற் கறைசை திருவானிகூடல்' என்று கொங்கு மண்டல சதக நூலும் வாணியைத் திருவானி கூடல் என்றே குறிப்பிடும். சிலர் திருவாணிகூடல் என்று பாடபேதம் கொண்டு இத்திருப் புகழை மதுரைப் பாடலோடு சேர்ப்பர். இங்குள்ள கூடுதுறை, பிரயாகை (அலகாபாத்) போலத் (திரிவேணி சங்கமம்' என்று கூறப்படுகிறது. வடநாட்டில் கங்கையோடு யமுனையாறு கலக்குமிடத்தில் சரஸ்வதி அந்தர் வாகிணியாகக் கலந்து பிரயாகை (திரிவேணி சங்கமம்) ஏற்படுவதைப் போல இங்கும் காவிரியும் பவானி யும், அந்தர் வாகிணியாக அமுதநதியும் கலப்பதால் தமிழ் நாட்டுப் பிரயாகையாக இது விளங்குகிறது. கோல மிகுந்த பவானியும் பொன்னியும் கூடுதுறை' என்பார் கொங்கு மண்டல சதக ஆசிரியர். இன்னும் அவிநாசித் தலபுராணம், பூந்துறைப் புராணம் போன்ற பல்வேறு புராணங்களாலும் பல சிறு பிரபந்தங்களாலும்