பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

49 காலிங்கராயன் கால்வாய் செல்லுகிறது. நீர் கசியாமல் இருக்கக் கால்வாய் காரையால் கட்டப்பட்டிருக்கிறது. எனவே 'காரை வாய்க்கால்' என்று அழைக்கின்றனர். இன்னும் பல இடங்களில் 'பவானி வாய்க்கால்' என்றும் சிறியதாக இருப்பதால் சின்ன வாய்க்கால்' என்றும், புதிதாகக் கீழ்பவானி வாய்க்கால் வெட்டப்பட்டிருப்பதால் காலிங்கராயன் கால்வாயைப் பழைய வாய்க்கால்' என்றும் பல இடங்களில் பல பெயர்களால் அழைக்கின்றனர். பலர் கால்வாய் என்ற சொல்லைக்கூடப் பின்னர் சேர்க்காமல் 'காலிங்கராயன்' என்ற தனிச் சொல்லாலேயே கால்வாயைக் குறிப்பர். கோணலின் காரணம் பவானி தொடங்கி நொய்யலில் கலக்கும் வரை காலிங்க ராயன் கால்வாய் மிகவும் கோணல் கோணலாக இருக்கிறது. அதனால் தான் கோண வாய்க்கால்' என்று கூறுகின்றனர். எனவே தான் பாம்பு வழிகாட்டிய தாகக் கதை நாட்டில் உலவுகின்றது என அறிகின்றோம். ஆனால் இதன் உண்மை யான காரணம் என்ன? பவானி அணை கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். நொய்யலாற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் கடல் மட்டத்திலிருந்து 412.48 அடி உயரம். நேராகப் பவானிக்கும் நொய்யலுக்கும் இடையில் உள்ள தூரம் 32கல். ஆனால் வளைந்து செல்லுவதால் கால்வாயின் நீளம் 57 கல் ஆகிறது. காலிங்கராயன் கால்வாய் பவானியிலிருந்து நேராக நொய்யல் வரை செல்லுமானால் வயலுக்குத் தண்ணீர் பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும். எனவே தான் நீர் தேங்கி நின்று வயலுக்குப் பாய்ந்து வளப்படுத்துவதாகவும் நீரின் வேகத்தைக் குறைத்துக் கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவு களைத் தடுப்பதற்காகவும் கால்வாய் வளைந்து வளைந்து மேட்டுப்பாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்லு