பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

85 கலம் ஊர்ச்சபையார் கொடுக்கவேண்டும் என்றுகாலிங்க ராயன் கட்டளையிட்டார். திருப்பணி செய்யப்பெற்ற இக் குளத்திற்குத் தன் அரசன் பெயரால் ‘வீரபாண்டியப்பேரேரி' என்று பெயர் வைத்தார். இன்றும் அக்குளம் விசயமங்கலத் தில் உள்ளது. கொடுமுடி தேவத்தான ஊராகிய விதரியான திருச்சிற்றம்பல நல்லூரில் ஒரு குளம் பாழ்பட்டு மழை பெய்து நீர் நிறையும் காலத்தில்கூட உடைவு குலைவுபட்டுக் கிடந்தது. கி.பி. 1256 ஆம் ஆண்டு காலிங்கராயன் இக் குளத்தை அடைத்துத் திருத்தி வெள்ளைக்குளம் வரகுணன்' என்று பெயரிட்டார். இப்பெயர் பாண்டியர் தம் முன்னோர் கள் மீது காலிங்கராயன் கொண்ட பற்றைக் காட்டுகிறது. வீரபாண்டியனின் பத்தாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1260) வெள்ளோட்டிலுள்ள சிறிய குளத்தையும் பெரிய குளத்தையும் கனகபுரத்தில் ஒரு குளத்தையும் குறுக்குக் குளத்தையும் காலிங்கராயன் வெட்டுவித்தார். கி.பி. 1264 ஆம் ஆண்டு (கோபி வட்டம்) எலத்தூரில் உள்ள குளம் உடைத்துக் கொள்ளவே காலிங்கராயன் அதனை அடைத்துத் திருத்தினார். வீரபாண்டியனுடைய 24 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1274) சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள நல்லாட்டுக் குளத்தைச் செப்பனிட்டார். கோயில் கட்டுதல் வெள்ளோட்டுச் சிவன் கோயிலைக் காலிங்கராயன் தான் திருப்பணி செய்து புதுப்பித்துக் கட்டினார் என்று "தம்முடைய இஷ்ட தெய்வமான சர்வேஸ்வர பாடகவல்லி நாச்சியார் தேவஸ்தானம் சீரணோத்தாரணம் பண்ணிக் கொண்டு இருந்தான்' என்னும் பகுதியால் வமிசாவளி தெரிவிக்கின்றது. ' இந்தியாவை ஆளும் தலைவர்களும்