பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 நூலின் இறுதியில் பள்ளு நூலை இயற்றிய முத்துக்கருப்பனுக் கும் மேடையில் பள்ளு நூலை நாடகமாக நடித்துக் காட்டிய சஞ்சீவி என்பவனுக்கும் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன. பரிசுகள் வழங்கப்பெற்ற இடம் எது? “காலிங்க ராயன் கடாட்சத்து னாலே சாலவே இந்தத் தரணியில் வாழும் குடியா னவர்கள் கூடிய சபையில்” பரிசுகள் வழங்கப்பெற்றன என்று அந்நூல் கூறுகின்றது. பள்ளர்கள் தாம் வழிபடும் கடவுளர்கட்கெல்லாம் பல சிறப்புக்களைச் செய்யுமாறு கட்டளையிடும் இடத்தில் “கங்கை கோத்திரம் காலிங்க ராயற்குக் கண்ட சரமும் உத் தொண்டியும் சாற்றுங்கள் என்று குறிப்பிடப்பெறுவதைக் காண்கின்றோம். ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு நூலின் வாயிலாக இப்பகுதி வேளாளர்கள் சிறப்பெய்தி இவ்வுலகில் வாழக் காலிங்கராயன் கால்வாய்தான் காரணம் என்றும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து அக்கால்வாய் வெட்டிய காலிங்கராயன் உலகினரால் தெய்வமாக வணங்கப்பட்டான் என்ற செய்தியையும் அறிகின்றோம். நல்லணவேள் காதல் வாழ்வாங்கு வளமுடன் வாழும் ஒரு தலைவனின் இல் வாழ்க்கைச் சிறப்பினைக் கூறி, அவனது பெருமையும் புகழும் பேசி, விருந்தோம்பித் தன் குழுவுடன் அவன் வேட்டைக்குச் செல்லுவதாகக் கூறித் தலைவன் அங்கு அழகிய பெண்ணொருத்தியைக் கண்டு காமுறுவதாகப் பாடும் இலக்கியவகை காதல் பிரபந்தம் எனப்படும். கூளப்பநாயக்கன் காதல், கொடுமணல் கந்தசாமிக் காதல் என்பன அவற்றுட் சில.