பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 விளங்கியவரும் கல்வியை நன்கு கற்றவருமான காலிங்க ராயன் வெட்டிய கால்வாயின் கழிவு நீர்கூட வனத்தை நல்ல வயலாக்கும் தன்மையுடையது என்று பாடுகின்றார் அப் பாடலைப் பாடிய ஆசிரியர். இதோ அப்புகழ்மணம் கமழும் தனிப்பாடல்..... 'எற்று திரைப்பொன்னி கூடுறு வானி இடைமடங்க வெற்றி மிகுத்த அதிவீர பாண்டிய வேந்தமைச்சன் கற்ற அறிவினன் காலிங்க ராயன்செய் கால்கழிநீர் உற்ற வனத்தை உறுவய லாக உயர்த்தியதே' பூந்துறை நன்னாடு வாழ உலகில் மூன்று மிகப்பெரிய ஆற்றல் மிகு தீரச் செயல்கள் நிகழ்ந்துள்ளன வாம். முதலாவது சீதா பிராட்டியைச் சிறை மீட்கும் பொருட்டு இராமபிரான் இலங்கைக்குச் செல்லச் சேது அணை கட்டியது. இரண்டாவது காவிரியாறு பெருகி நாட்டை அழித்தபோது கரிகால் பெருவளத்தான் காவிரிக்குக் கரை எழுப்பியும் கல்லணை கட்டியும் நாட்டுக்கு நலன் விளைத்த அரிய செயலாகும். அதனை ஒத்த மூன்றாவது பெரிய செயல் எது தெரியுமா? மலைகளை யுடைய பூந்துறை எனப்படும் நல்ல நாடு வளம்பெற்று வாழும்பொருட்டுப் பவானி ஆற்றில் கரையிட்டு அடைத்துக் காலிங்கராயன் அணை கட்டியதாகும். இந்தப் போற்றுதற் கரிய செயலைச் செய்தவன் வெள்ளோடு சாத்தந்தை குலக் காலிங்கராயன் ஆவான் என்று கூறுகின்றார் சிறப்புமிகு இத்தனிப்பாடலைப் பாடிய ஆசிரியர். திரைகொண்ட வாரியை மாலடைத் தான்செழுங் காவிரியை உரைகொண்ட சோழன்மு னாளடைத் தான் உலகு ஏழறிய வரைகொண்ட பூந்துறை நன்னாடு வாழ்க அவ் வானிதனைக் கரைகொண் டடைத்தவன் வெள்ளோடைச் சாத்தந்தை காலிங்கனே'