பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

04 பயணத் தூரம். பாசன நில அளவின் பரப்பு பல இடங்களில் பலவகையாக அமைந்துள்ளது. இந்த இடத்தில் (ஈரோட்டில்) ஒருசிறு பாலத்தின் மேல் இக் கால்வாய் ஓடுகிறது. முன்பு இக்கால்வாய் கரூர்வரை இருந்ததாகவும் நொய்யலாற்றை ஒரு பாலத்தின் வழியாகக் கடந்தது. இது ஒரு அருமையான வேலைப் பாடாக அமைந்துள்ளது. இக்கால்வாய்ப் பணி முழுவதும் காலிங்கராய வேளாளர் என்பவரால் செய்யப்பட்டது. அவர் ஒரு செல்வராகவும் செல்வாக்குப் பெற்றவராகவும் இருந்த காரணத்தால் தன் சாதி மக்களிடம் இருந்து கால்வாயின் தேவைக்கான பணத்தைத் திரட்டினார். இது சற்றேறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அவரது சந்ததியினர் இப்பொழுது இல்லை . அவரது குடும்பத்தினர் இச்சிறந்த பணிக்காக நிலங்களைப் பெற்றுக் கொள்ளவில்லை. சற்றேறக்குறைய 1045 'மா' நிலங்கள் அதாவது 3459 ஏக்கர்கள் இக்கால்வாயினால் பாசனவசதி பெறுகிறது. புன்செய் நிலம், ஏறக்குறைய 1713 ஏக்கர் கள் (400 புல்லாக்கள்) இருக்கின்றன” அக்காலத்தில் (1800) மைல் பழக்கத்திற்கு வரவில்லை . அதனால் 15 மணி மலபார் பயணத்தூரம் என்கின்றார். அத்தூரம் சுமார் 60 மைல்கள் ஆகும். புல்லா என்பது 1 வள்ளம் ஆகும். 1 வள்ளம் 4 ஏக்கருக்குச் சமம். எனவே 400 புல்லாக்கள் ஏறக்குறைய 1600 ஏக்கர்கள் ஆகும். மெக்கென்சி கர்னல் மெக்கென்சி இந்தியாவின் நில அளவுத் தலைமை இயக்குநராகப் பதவியேற்றவர் (1753-1821). வரலாற்று உணர்ச்சி மிகுந்த அவர் தமிழகத்தில் இருந்த