பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாழையடி வாழை வெள்ளோட்டுக் கனசு புரம் சாத்தந்தை குல நஞ்சையன் மகன் லிங்கையன் கொங்குப் பாண்டியரின் உயர் அலுவலனாகிக் கொங்கு நாட்டின் அதிகாரம் செலுத்தி வரும் நாளில் மேல்கரைப் பூந்துறை நாடு, மேல்கரை அரைய நாடுகளின் சில பகுதிகள் வளம்பெறக் காலிங்க ராயன் அணை கட்டிக் கால்வாயும் வெட்டி வைத்தார் என்பது வரலாற்று ஆய்வில் கண்டறிந்த உண்மையாகும். இம்மாபெரும் அறப்பணி கி. பி. 1265 வாக்கில் முடிந்திருக்க வேண்டும் என்றும் முன்பு கண்டோம். கால்வாய் வெட்டிய காலிங்கராயன் பரம்பரையினர் யார்? அவர்கள் இப்போது எங்குள்ளனர்? என்று அறிந்து கொள்வதும் சிறப்புமிகு அப்பரம்பரை பற்றிய பிற்கால வரலாற்றை அறிவதும் இன்றியமையாததாகும். புக்கானன் 7-11-1800 இல் ஈரோட்டில் காலிங்கராயன் கால்வாயைப் பார்த்துப் பாராட்டிவிட்டு “ அவர் குடும்ப! இன்று இல்லை ' என்று எழுதியுள்ளார். ஆனால் 1-3-1798 இல் எழுதப்பட்ட பாலக்காட்டுக் கோட்டைக் கம்பெனிப் படையின் தளபதி எழுதிய கடிதத்திலும், மக்கென்சியின் கைபீதிலும் கால்வாய் வெட்டிய காலிங்கராயன் பரம்பரை யில் வந்த 29 ஆவது பாளையக்காரரான குமாரசாமிக் காலிங்கராயர் பற்றிய செய்திகளையும் அவர் கையெழுத்தையும் காணுகின்றோம். எனவே புக்கானன் காலிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் அதாவது அவர் கால்வாயைக் கண்ட ஈரோட்டுப் பகுதியில் அதை வெட்டியவர் குடும்பம் இல்லை என்று கூறுவதாகவே நாம் கொள்ள வேண்டும்.