பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கோச்செங்கணான் காலம் கோச்செங்கணான் சங்ககாலத்தவனா? நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவனும் அப்பர்க்கு முற்பட்டவனுமான கோச்செங்கணான் சங்க இறுதிக் காலத்தவன் என்று பலர் கூறியுள்ளனர். இதற்கு அவர் சான்றாகக் காட்டத்தக்கவை இரண்டு: (1) 74 ஆம் புறநானூற்றுப் பாட்டின் அடிக்குறிப்பில், 'சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணானோடு போர்ப்புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணிர் தா என்று, பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு", என வரும் செய்தி. (2) பொய்கையார் சோழன்மீது களவழிபாடிச் சிறைப்பட்ட அரசனை மீட்டார் எனக் களவழி ஏடுகளின் ஈற்றில் எழுதப் பட்டுள்ள செய்தி. இவ்விரண்டு கூற்றுக்களையும் ஆராய்வோம். 1. (1) மேற்சொன்ன 74ஆம் செய்யுளில் கோச்செங்கணான் என்ற பெயர் இல்லை. அடிக்குறிப்பு, பாடிய புலவன் எழுதியதும் அன்று என்பது, உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்பதால் அறியப்படும், புறநானூற்றுப் பாடல்களின் கீழ் உள்ள (பிற்காலத்தார் எழுதிய) அடிக்குறிப்புக்கள் பல இடங்களில் பொருத்தமற்றவை என்பது அறிஞர் நன்கறிந்ததே. சான்றாக ஓர் இடம் குறித்துக்காட்டுவம். புறம் 389 ஆம் செய்யுளில் 'ஆதனுங்கனைப்போல நீ கொடுப்பாயாக என வரும் தொடரைக் கண்டதும், அஃது உவமையாகக் கூறப்பட்டதென்பதையும் கவயாமல், "இஃது ஆதனுங்கனைப் பாடிய பாட்டு என்று அடிக் குறிப்பு வரையப்பட்டுள்ளது. இங்ங்ணம் பிழைபட்ட இடங்கள் பல; பொருத்தமற்ற அடிக்குறிப்புக்கள் பல. இத்தகைய அடிக்குறிப்புக்களில் செங்கணானைக் குறிக்கும் அடிக்குறிப்பும் ஒன்றாகலாம். களவழிப் பாக்களைக் காண, கோச்செங்கணான் பேரரசன் என்பதும் வீரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/102&oldid=793098" இலிருந்து மீள்விக்கப்பட்டது