பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுநதரா காலம 105 இனிச் சேக்கிழார், சுந்தரர் குறியாத சில செய்திகளைக் கழற்சிங்கர் புராணத்திற் கூறியுள்ளார். அவற்றைக் கண்டு பின் அவற்றுக்கும் மேற்சொன்ன இருவர் பற்றிய குறிப்புக்கட்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காண்போம்: சேக்கிழார் கூறுவன: கழற்சிங்கர் 1. சிவனைத் தவிர வேறு தெய்வத்தை வணங்காதவர். வடநாட்டுப் போரில் வெற்றி கொண்டவர். நாடு அறநெறியில் வைக நன்னெறி வளர்த்தவர். பல கோவில்கட்குத் தொண்டு செய்தவர். இவரது பட்டத்தரசி உரைசிறந்து உயர்ந்தவள். அரசர் திருவாரூரில் இறைவனை வணங்குகையில் இவ்வரசி பிரகாரத்தைச் சுற்றிக்கொண்டே கோவிலின் அழகைக் கவனித்து வந்தாள்; வந்தவள், பூத்தொடுக்கும் மண்டபத்தண்டை விழுந்திருந்த புதுப்பூ ஒன்றை எடுத்து மோந்தாள் (அத்தவற்றுக்காகச் செருத்துணை நாயனாரால் மூக்கு அரியப்பட்டாள்). இவற்றுள் 1, 2, 3, 5 இராச சிங்கற்கும் நந்திவர்மற்கும் ஒற்றுமையுடைய குறிப்புக்களே ஆகும். இராச சிங்கனிடம் (அவனைப் பற்றிய இன்றுள்ள சான்றுகள் கொண்டு) இருந்தவை என்று காட்டமுடியாத நிலையில் 4ம், 6ம் காண்கின்றன. ஆதலின், அவற்றை இங்கு விளக்கல் நலமாகும். 4ஆம் குறிப்பு இராச சிங்கன் கயிலாசநாதர் கோவில், ஐராவதேசுவரர் கோவில், மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோவில் போன்ற பல கோவில்களைக் கட்டினவன்; ஆயின், வேறு பல கோவில்கட்குத் 'தொண்டு (திருப்பணி) செய்தனன் என்று கூறத்தக்க சான்றில்லை. பாடல் பெற்ற கோவில்களில் ஒன்றிலேனும் இராச சிங்கன் கல்வெட்டு இருந்ததாகத் தெரியவில்லை." ஆயின், நந்திவர்மன் செய்த சிவத் தொண்டுகள் பலவாகும்: 1. இவன் பட்டம் பெற்ற 6ஆம் ஆண்டில் பொன்னேரிக்கடுத்த திருக்காட்டுப்பள்ளியில் புதிதாய்க் கட்டப்பட்ட சிவன் கோவிலுக்கு அச்சிற்றுரையே தேவதானமாக விட்டான்." இதனைக் கூற எழுந்ததே வேலூர்ப் பாளையப் பட்டயம். 2. இவன் திருவதிகை வீரட்டானேசர் முன் விளக்கெரிக்க 100 கழஞ்சு பொன் அளித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/112&oldid=793124" இலிருந்து மீள்விக்கப்பட்டது