பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கால ஆராய்ச்சி திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருப்பொன்னூசல், குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி முதலிய இவ்வகைகளைப் பிற்காலத்துப் பெருகியன எனக் கொள்ளலாம்". (11) மூவர் பாடல்களில் சிலபெருமான் திருவிளையாடல்கள் மிகச் சிலவாகவே குறிக்கப்பட்டுள்ளன. ஆயின், மாணிக்கவாசகர், கல்லாடர் பாடல்களில் அவை மிகப் பலவாகக் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, திருவிளையாடற் கதைகள் மிகப்பலவாக வழங்கிய பிற்பட்ட காலத்தில் மணிவாசகர் இருந்தனராதல் வேண்டும்." (12) ஒரு நூலுக்கு உரை வகுக்கும் உரையாசிரியன் அந்நூலாசிரியன் காலத்து நூல்களிலிருந்தும், அவனுக்கு முற்பட்ட கால நூல்களிலிருந்தும் விளக்கம் தருதலே ஏற்றது. அம்முறை பற்றியே திருக்கோவையாருக்கு உரைவகுத்த பேராசிரியர் தொல்காப்பியம், குறள், கலித்தொகை, நாலடியார், அப்பர் தேவாரம், இறையனார் அகப்பொருள் இவற்றிலிருந்து விளக்கம் தந்துள்ளார். இவற்றை நோக்க, அப்பர் மணிவாசகர்க்கு முற்பட்டவர் என்பது தெளிவன்றொ’ (13) மணிவாசகர் ஈழத்துப் புத்தரை வாதில் வென்ற செய்தி வாதவூர்த் தல புராணத்தும் ஈழநாட்டு ராஜரத்னகரி என்னும் நூலிலும் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி கி.பி. 869இல் நடந்ததாதல் வேண்டும்." (14) பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், மாணிக்கவாசகர் இந்நால்வர் பாடல்களும் கருத்திலும் மொழியிலும், நடையிலும், அமைப்பிலும் ஏறத்தாழ ஒத்திருத்தலால், ஏறத்தாழ இந்நால்வரும் சமகாலத்தவராகக் கூறலாம். முதல் மூன்று ஆழ்வார்களும் ஏறத்தாழக் கி.பி. 850-க்கும் 925-க்கும் இடைப்பட்டவர். எனவே, சுருங்கக்கூறின், மணிவாசகர் பெரியாழ்வாரும் ஆண்டாளும் வாழ்ந்த காலத்தவராகவும், இரண்டாம் வரகுணன் காலத்தவராகவும் இருந்தவர் என்று கொள்ளுதல் பொருத்தமாகும். (15) மணிவாசகர் தமது போற்றித் திரு அகவலில், கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலைநா டுடைய மன்னே போற்றி கலையார் அரிகே சரியாய் போற்றி திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி பொருப்பமர் பூவணத் தரனே போற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/129&oldid=793159" இலிருந்து மீள்விக்கப்பட்டது