பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் காலம் 127 அல்லவா? அங்ங்னம் அவர் பாடியதாகப் பாடல் இன்மையாலும், பாடியதாகக் குருபரம்பரை கூறாமையாலும், திருமழிசையாழ்வார் காலத்தில் தில்லைச் சிவன் கோவிலுள் பெருமாள் கோவில் அமைந்திலது என்பது தேற்றம். ஏறத்தாழத் திருமங்கையாழ்வார் காலத்தில் வாழ்ந்தவராகக் கூறப்படும் குலசேகர ஆழ்வார் தில்லைநகர்த் திருச்சித்திரக்கூடத்தின் மீது பத்துப் பாக்கள் பாடியுள்ளார். அவற்றுள், தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால் தொன்னகரந் துறந்துதுறைக் கங்கை தன்னைப் சித்திரகூடத் திருந்தான் தன்னை இன்று தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருநிலத்தார்க் கிமையவர்நேர் ஒவ்வார் தாமே என்னும் செய்யுள், திருச்சித்திரகூடம் புதிதாக அமைக்கப்பட்டது என்பதை ஐயத்துக்கிடமின்றிக் குறித்திருத்தல் காண்க. எனவே, திருமங்கையாழ்வார் பாடியதாக மேலே காட்டப் பெற்ற செய்யுள் கருத்தும் குலசேகர ஆழ்வார் பாடல் கருத்தும் ஒன்றுபடல் காண்க. இரண்டாம் நந்திவர்மன் காலம் கி.பி. 710-775 முதலாம் இராஜசிம்ம பாண்டியன் காலம் கி.பி. 740-765. எனவே, இவ்விரு பல்லவ பாண்டிய மன்னர்கள் சமகாலத்தவராவர். அரிகேசரி நல்லூர் இராஜ சிம்மேசுவரத்தில் உள்ள சிவபெருமானை 'அரிகேசரியாய் எனப் பாடிய மணிவாசகர், நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்ட தில்லைநகர்த் திருச்சித்ரகூடத்தில் எழுந்தருளியுள்ள திருமாலைத் தம் திருக்கோவையாரில் குறித்துள்ளமை காணத்தக்கது. புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியா திரங்கிடந் தாயென் றிரப்பத்தன் னிரடிக் கென்னிரண்டு கரங்கடந்தா னொன்று காட்டமற் றாங்கதுங் காட்டிடென்று வரங்கிடந் தான்தில்லை யம்பல முன்றிலம் மாயவனே. எனவே, மணிவாசகர் நந்திவர்ம பல்லவனுக்கும் முதலாம் இராஜ சிம்மனுக்கும் காலத்தாற் பிற்பட்டவர் என்பது ஐயமற விளங்குமன்றோ? ஏறத்தாழ முதலாம் இராசராசன் காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் பூந்துருத்தி நம்பிகாடநம்பி என்பவர் தாம் பாடிய திருவிசைப்பாவில் திருநாவுக்கரசரை முதலிலும் திருஞானசம்பந்தரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/136&oldid=793177" இலிருந்து மீள்விக்கப்பட்டது