பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் காலம் 429 "சோழர் ஆட்சிக்காலத்தில் இராசராச சோழனும், அவன் மகன் இராசேந்திர சோழனும் மூவர் உருவங்களைத் தாங்கள் கட்டிய தஞ்சைக் கோவிலில் வைத்து வழிபட்டனர். ஆனால் மாணிக்கவாசகர் உருவம் வைக்கப் படவில்லை. அக்காலத்தில் வேறு கோவில்களிலும் அவர் சிலை வைக்கப்படவில்லை. முதன் முதலாக இரண்டாம் இராசேந்திரன் காலத்தில்தான் இவர் செய்த திருவெம்பாவையின் பெயர் கல்வெட்டில் புகுந்தது. கி.பி. 1056 இல் திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோவிலில் திருவெம்பாவை ஒதுதற்கு நிவந்தம் விட்ட செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது." இதற்குப் பின்புதான் திருச்சாழல் ஓதல், திருப்பள்ளிஎழுச்சி பாடுதல் முதலியவற்றிற்காக நிலதானங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் தேவாரம் அருளிய மூவர் பாடல்களும் சோழப் பேரரசை ஏற்படுத்திய ஆதித்த சோழன் காலம் முதலே பல கோவில்களில் ஒதப்பட்டு வந்தன என்பதைக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன." - இவற்றை நோக்க, மணிவாசகர் மூவர்க்கும் பிற்பட்டவராக இருக்கலாம். இதனால் அவர் பாடிய திருவாசகத்தின் சிறப்புச் சிறிது காலம் கழித்துத்தான் நாட்டில் பரவத் தொடங்கியது. அங்ங்னம் பரவத் தொடங்கிய காலம் முதலே (கி.பி. 11ஆம் நூற்றாண்டின் பிற்பாதி முதலே) அவர் பாடல்களும் பெயர்களும் அவர் பற்றிய விழாக்களும் கல்வெட்டுக்களில் இடம் பெறலாயின என்று கருதுதல் பொருத்தமாகும். (1) சுந்தரரது திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடப்பட்டுள்ள "பொய்யடிமை இல்லாத புலவர் என்னும் தொடர், கடைச்சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மரைக் குறிப்பதாக நம்பியாண்டார் நம்பியே தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் முதன் முதலில் குறிப்பிட்டார். அவரைப் பின்பற்றியே பின்வந்த புலவர்களும் குறிப்பிட்டனர். கடைச் சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மரும் சைவரே என்பதற்குச் சான்று யாது? அங்ங்ணம் கூறச் சான்று இன்மையின் மேற்குறிப்பிடப்பட்ட தொடர் சங்கப்புலவரைக் குறியாது என்பது திண்ணம். கடைச் சங்கப் புலவருள் சமணரும், பெளத்தரும், பிற சமயத்தாரும் இருந்தனர் என்பதற்கு தொகை நூல்களே சான்று பகரும். (2) சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் பதினொரு செய்யுட்களே உள்ளன. அவற்றுள் பத்தாம் செய்யுள் முழுமையும் தொகை அடியார்களையே குறிப்பதாகும். முதற் செய்யுளின் தொடக்கம் தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரைக் குறிக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/138&oldid=793181" இலிருந்து மீள்விக்கப்பட்டது