பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கால ஆராய்ச்சி இக்காரணங்கள் பொருந்துவனவா? 1. இரண்டாம் குலோத்துங்கன் உலாவில் (வரிகள் 75-115) பேரம்பலம் என்ற சொல் காணப்படுகிறது. ஆனால், அதற்கடுத்த இராசராசன் உலாவில், இராசராசன் இன்னவன் மகன் என்று குறிப்பிடும் இடத்தில் அவன் பேரம்பலம் முதலியவற்றைத் தூய செம்பொன்னிற் குயிற்றினாற்கு மகன் என்பது தெளிவாக உள்ளது." ஆதலின், இரண்டாம் குலோத்துங்கன் பேரம்பலம் பொன்வேய்ந்ததைக் கூத்தர் குறிக்கவில்லை என்ற முதற்காரணம் பொருந்தாமை காண்க. 2. இஃது ஒரு சிறந்த காரணமாகாது. முதல் இராசராசன் நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு திருமுறைகளை வகுத்தான் என்பதும், உலகம் போற்றும் இராசராசேச்சரத்தைக் கட்டினான் என்பதும், சைவத்தைப் பெரிதும் வளர்த்தான் என்பதும் பாராட்டத்தக்க - குறிக்கத்தக்க செயல்கள் அல்லவா? அவன் மகன் புதிதாக நியமித்த கங்கைகொண்ட சோழபுரம், அதன்கண் எடுப்பித்த பெரிய கற்றளி, அவன் செய்த சைவ சமயத் தொண்டு இவை குறிக்கத்தக்க செயல்கள் அல்லவா? இவற்றுள் ஒன்றையேனும் அவர்களைப்பற்றிக் கூறிய இடங்களிற் கூத்தர் குறித்தாரில்லை. கூத்தர் விக்கிரம சோழன் காலத்தவர்; அவன் செய்த திருப்பணிகள் யாவற்றையும் நேரிற் கண்டவர். அவன் சிதம்பரம் கோவிலிற் பல திருப்பணிகள் செய்தான் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன’ இவற்றுள் ஒன்றை யேனும் கூத்தர் குறிப்பிட்டார் இல்லை. ஏன் குறிக்கவில்லை என்று யார்தாம் காரணம் கூறக்கூடும்? இவற்றையெல்லாம் நோக்க, இவ்விரண்டாம் காரணம் வலியுடைத்தாகாமை கண்டு கொள்க. 3. ஒட்டக்கூத்தர் குலோத்துங்கன் ஆசிரியர் என்பதும் அவர் சிறந்த சிவபக்தர் என்பதும் உண்மையே ஆயின், அவர் சேக்கிழாரைப் போலத் திருத்தொண்டர் புராணச் செய்திகளில் நிறைந்த புலமையுடையவர் என்பதற்குச் சான்றென்னை? சான்றின்மையின், திருத்தொண்டர் புராணச் செய்திகளை முற்றவுணர்ந்த சேக்கிழாருடைய உணர்ச்சியையும் தகுதியையும் நன்குணர்ந்த அரசன் அவரைப் பெரிய புராணம் பாடச் செய்தான் என்று கோடலில் எவ்விதத் தவறும் இல்லை. அரசன் சேக்கிழாரைக் கொண்டு பெரிய புராணம் பாடுவித்தமையால் ஒட்டக்கூத்தர் பெருமை குறைந்துவிடாதன்றோ? 4. இக்காரணமும் பொருத்தமுடையதாகாது. என்ன? எல்லாக் கோவில்களிலும் அரசர் கால முறைப்படி அவரவர் காலத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/151&oldid=793216" இலிருந்து மீள்விக்கப்பட்டது