பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அன்றோ? அது கொள்ளத் தக்கதாயின், இரண்டாம் இராசராசன் தன் இளவரசுக் காலத்திலிருந்தே, சேக்கிழாரை நன்கு அறிந்தவன்; நெருங்கிப் பழகியவன்; நாயன்மார் வரலாறுகளை அவர் வாயிலாகவும் பின்னர் அவர் செய்த பெரிய புராண வாயிலாகவும் தெளிவாக அறிந்தவன் என்பன உணரலாம். அவன் அரசனான பின்னர், தன் பெயர் கொண்டு கட்டிய பெருங்கோவிலில் சிவபிரான் இறையிடத்துப் புறச்சுவரில், அவ்விறைவனையே பாடித்தொழுது முத்தி அடைந்த நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளைச் சிற்பங்கள் வாயிலாக உலகத்திற்கு உணர்த்தினான் என்பது பெரிதும் பாராட்டத்தக்கதாகும். இச்சிறப்புடைய செயலை நோக்கப் பெரிய புராணம் இரண்டாம் இராசராசன் காலத்திற்றானே மக்களிடம் பரவத் தொடங்கியதென ஒருவாறு நம்பலாம். ஒற்றியூர்க் கல்வெட்டு மேற்சொன்ன முடிடை அரண் செய்வது போலத் திருவொற்றியூர்க் கல்வெட்டு ஒன்று காண்கிறது. அஃது இரண்டாம் இராசராசற்குப் பின் வந்த இரண்டாம் இராசாதிராசனது (கி.பி. 1166-1182) ஒன்பதாம் ஆட்சியாண்டில் (ஏறத்தாழக் கி.பி. 1174-இல் வெளியிடப் பெற்றதாகும். அதனில், "திருப்பங்குனி உத்தரத்து ஆறாந் திருநாளான புதன்கிழமையும் ஏகாதசியும் கூடிய ஆயில்யத்தினன்று, மடத்துத் தலைவரான சதுரானன பண்டிதர் காபாலிகரது சோமசித்தாந்தத்தை விரித்த வாகீச பண்டிதர், இரண்டாம் இராசாதிராசன் முதலியவர்கட்கு முன் படம்பக்க நாயக தேவர் திருமகிழின்கீழ்த் திருவோலக்கம் செய்து எழுந்தருளியிருந்து ஆளுடைய நம்பி ரீ புராணம் கேட்டருளா நிற்க ..... 37 என்னும் அரிய செய்தி காணப்படுகிறது. 'ஆளுடைய நம்பி என்பது சுந்தரர் பெயர். எனவே, அவரைப் பற்றிய புராணமே கோவிலில் படிக்கப்பட்டது என்பது தெரிகிறது. மக்கள் கேட்கத்தக்க நிலையிலும் கோவிலில் விளக்கமாக வாசிக்கத்தக்க முறையிலும் சுந்தரர் வரலாற்றைக் கூறுவது பெரிய புராணம் ஒன்றேயாகும். மேலும், சுந்தரர் வரலாறு கூறும் வடமொழி நூலோ வேறு தமிழ் நூலோ சேக்கிழார்க்கு முன் இருந்தது என்று கூறச் சான்றில்லையாதலின், திருவொற்றியூர்க் கோவிலில் படிக்கப்பட்டது, சேக்கிழார் செய்த பெரிய புராணமாகவே இருத்தல் வேண்டுமெனக் கோடல் பொருத்தமாகும். கல்வெட்டுக்களில் கண்ட சேக்கிழார் என்போர்: இனிப் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளனரா என்பதைக் காண்போம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/157&oldid=793228" இலிருந்து மீள்விக்கப்பட்டது