பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 莎第Q〕 ஆராய்ச்சி சான்றுகள் கொண்டு விளக்கப்பட்டதாலும், இப்பட்டியற்படி இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் அவன் மகனான இரண்டாம் இராசராசன் காலத்திலும் வெளிப்பட்ட கல்வெட்டுக்களில் சேக்கிழார் புராண ஆசிரியர் குறித்த சேக்கிழார் உத்தம சோழப் பல்லவராயர், சேக்கிழார் பாலறாவாயர் என்பவர் பெயர்கள் காணப்படலாலும் என்க. சேக்கிழார் மாதேவடிகள் "மாதேவடிகள் என்பது சேக்கிழாரது பத்திச் சிறப்பு நோக்கி வந்த பெயராகலாம். இதற்கேற்பச் சேக்கிழார் புராண ஆசிரியர் அவரைக் குன்றைமுனி சேக்கிழார்' எனவும், அண்டவாணர் அடியார்கள் தம்முடன் அருந்தவந்தனில் இருந்தவர்' எனவும் கூறியிருத்தல் கருதற்பாலது. ஆதலின், சேக்கிழார்க்கு மாதேவடிகள் என்ற பெயர் அவர் பெரிய புராணம் பாடிய பிறகு உண்டான தென்று கோடல் பொருத்தமாகும். இராமதேவன் இப்பெயர் சேக்கிழார் புராண ஆசிரியர் கூறாததாகும். இது சேக்கிழாரது இயற்பெயர் என்னலாம். சிறந்த சைவ மரபிலே பிறந்த சேக்கிழார்க்கு இராமதேவன் என்ற வைணவப் பெயர் அமையுமோ? எனின், அமையும் என்னலாம். 63 நாயன்மாருள் ஒருவராகிய முனையதரையர் நரசிங்கர் என்ற வைணவப் பெயரையும், ஒன்பதாம் திருமுறையில் இரண்டு பதிகங்கள் பாடியுற்ற சிவனடியார் ஒருவர் புருடோத்தம நம்பி என்ற வைணவப் பெயரையும் கொண்டிருந்தனர் என்பதையறிய சிறந்த சிவபத்தனான முதற் குலோத்துங்கன் மனைவியருள் ஒருத்தி பெயர் 'நம் பிராட்டியார் சீராமன் அருமொழி நங்கை என்ற ஏழுலகம் உடையார்” என்பதையும் நோக்க, பெரிய புராண ஆசிரியரும் சிறந்த சிவனடியாரும் ஆகிய சேக்கிழார் இராமதேவன் என்ற பெயர் பெற்றிருந்ததில் வியப்பில்லை என்க. மேலும், இச்சேக்கிழார் மரபில் வந்த ஒருவன் குன்றத்தூர்ச் சேக்கிழான் வரந்தரு பெருமாள் என்ற திருவூரகப் பெருமாள் 40 என்ற பெயர் கொண்டு மூன்றாம் இராசராசன் காலத்தில் இருந்தான் என்பது நோக்கத் தக்கது. 'திருவூரகப் பெருமாள் என்ற பெயர் குன்றத்தூரில் கோவில் கொண்டுள்ள விஷ்ணுவின் பெயராகும்" என்பது இங்கு அறியத்தக்கது. இத்துடன் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினருள் சிலர் இன்றும் வைணவராக இருப்பதும் கவனிக்கத்தக்கது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/161&oldid=793239" இலிருந்து மீள்விக்கப்பட்டது