பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கால ஆராய்ச்சி


பிற சோழ வேந்தர் (கி. பி. 136 - 300) நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான், கிள்ளிவளவன். இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக்கோப் பெருநற்கிள்ளி, வேல் பல்தடக்கைப் பெருவிரல் கிள்ளி, முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், சோழன் நல் உருத்திரன் முதலியோர் சோணாட்டை ஆண்டனர் என்று புறநானூற்றுப் பாடல்கள் புகல்கின்றன. இவருட் சிலரேனும் கரிகாலனுக்கு முற்பட்டவர் ஆகலாம்; பலர் பிற்பட்டவர் ஆகலாம். பிளைநி, பெரிப்பளுஸ் ஆசிரியர், தாலமி போன்றோர் குறித்துள்ள வாணிகச் செய்திகள் யாவும் உண்மை என்பதைப் புறநானூற்றுப் பாக்களும், கரிகாலனைப் பற்றிய பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை என்னும் நெடும் பாடல்களும் உறுதிப்படுத்துகின்றன. புறநானூற்றின் கால எல்லைகள் கி. பி. 300க்குப் பின்பு காஞ்சியில் பல்லவர் ஆட்சி புரியத் தொடங்கினர். ஏறத்தாழக் கி. பி. 450இல் அச்சுதவிக்கந்தன் என்ற களப்பிரகுல காவலன் காவிரிப் பூம்பட்டினத்தில் பேரரசனாய் விளங்கினான் என்று புத்த தத்தர் புகன்றுள்ளார். எனவே, புறநானூற்றின் இறுதிக்கால எல்லை ஏறக்குறையக் கி. பி. 300 என்று கூறலாம்; அதன்மேல் எல்லை ஏறத்தாழக் கி. மு. 1000 என்னலாம்." குறிப்புகள் H. H.F.G. Teggart, Theory of History, pp. 18-22. 2. R. Gopalan's 'Pallavas of Kanchi, Chapter 3. 3, M.S. Ramaswamy Iyangar's ‘Studies in S. I. Jainism, pp. 52-54 and Dr. S. K. Aiyangar's valuable Int, to the ‘Pallavas of Kanchi' by R. Gopalan. 4. Ancient India, pp. 15-20. 5. R. Sathyanatha Iyer, History of India, Vol. I. p. 45, 6. முடியில் நாகவுரு தரித்த நாகர்குல அரசர் என்பது தோன்ற முடிநாகராயர் எனப்பட்டார். சேரர் மரபினரான கொச்சி அரசர் கிளைகள் ஐந்தனுள் ஒன்றற்கு 'முரிஞயூர் தாய்வழி என்பது பெயர். உதியஞ்சேரனைப் பாடிய இப்புலவர் பெருமானது ஊர் அம்முரிDயூர் போலும். மு. இராகவையங்கார் சேரவேந்தர் செய்யுட்கோவை 1, பக் 2.3. 7. தமிழ் வரலாறு, பக். 236 - 238. 8. History of the Tamils, pp. 491–494, 9. பக், 233, 10. K.A.N. Sastry. History of S. India, p. 113: (yps:Gaartai Glaig Glgudi atairpl இவரே ஒப்புக்கொள்வதால், பாரதகாலத்தில் சேரர் இருந்தனர் என்பதை ஒப்புக்கொள்ளுகிறார் என்பது இங்கு அறியத்தகும். எனவே சேர,சோழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/20&oldid=1412658" இலிருந்து மீள்விக்கப்பட்டது