பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கால ஆராய்ச்சி இதனால் அவன் காலத்தில்-மதுரைக்காஞ்சி பாடப்பட்ட காலத்தில்-கபிலர் இல்லை என்பது வெளிப்படை. ஆகவே, பொருநர் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு -ஆகிய நான்கும் ஏறத்தாழ ஒரு காலத்தன என்று கூறலாம். மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்ற மூன்றும் ஏறக்குறைய ஒரு காலத்தன என்று கூறலாம். முல்லைப்பாட்டில் யவனரைப் பற்றியும் மிலேச்சரைப் பற்றியும் குறிப்புக்கள் வருகின்றன (வரி 60–66). நெடுநல்வாடையிலும் இவ்விருவரைப் பற்றியும் குறிப்புக்கள் வருகின்றன (வரி 31-35, 101). ஆதலால், "இவ்வகைக் குறிப்புக்கள் காணும் நூல்கள் கால முறையில் அடுத்தடுத்துத் தோன்றின என்று கொள்ளுதல் பொருத்தமாகும். எனவே, நெடுநல்வாடையை அடுத்து முல்லைப்பாட்டுத் தோன்றியிருத்த்ல் கூடும்." பதிற்றுப்பத்தில் 10 ஆம் பத்து யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியதாய் இருத்தல் கூடும் என்று அறிஞர் கருதுகின்றனர்." அவன் இங்குறுநூற்றைத் தொகுப்பித்தவன் ஆதலால் அவன்மீது புலவர் ஒரு பத்தைப் பாடியிருக்கலாம். அவன் இறுதிப் பத்துக்கு உரியவனாயின், ஐந்தாம் பத்துக்குரிய செங்குட்டுவனுக்கு மிகவும் பிற்பட்டவனாவன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் போரில் வென்றதாகப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்று (17) கூறுவதால், இப்பாண்டியன் நெடுஞ்செழியன் செங்குட்டுவனுக்குப் பிற்பட்டவன் என்னலாம்; பதிற்றுப்பத்தின் வைப்பு முறையை நோக்க, சேரனை வென்ற இவன் ೧ುಹಿ ஏறத்தாழக் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு என்று கூறலாம். இங்ங்ணம் கொள்ளின், இப்பாண்டியனைப் பற்றிய நெடுநல்வாடையும், மதுரைக்காஞ்சியும், நெடுநல்வாடையை ஒத்துள்ள முல்லைப்பாட்டும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு நூல்கள் என்னலாம். சிறுபாணாற்றுப்படையில் பாரி முதலிய வள்ளல்கள் எழுவர் வரலாறுகள் இறந்த காலச் செய்தியாகக் கூறப்பட்டுள்ளன. இவ்வள்ளல்கள் கபிலர், பரணர், முடமோசியார், ஒளவையார் முதலிய புலவர்களால் பாடப்பட்டவர்கள். எனவே, இப் புலவர்களுக்கும் பிற்பட்ட காலத்தில் நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் சிறுபாணாற்றுப்படையைப் பாடினார் என்று கொள்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/59&oldid=793365" இலிருந்து மீள்விக்கப்பட்டது