உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 61

வாங்கினார்கள். வேறுசில மன்னர்கள் ஆறில் ஒருபாகத்தைக் காட்டிலும் அதிகமாக வாங்கியதாக வரலாற்றுச்சான்றுகள் பலவும் கூறுகின்றன. ஆறில் ஒருபாகத்தைக்காட்டிலும் அதிகமாக வாங்கும் அரசர்களைக் கொடுங்கோல் மன்னர் கள் என்று கருதுவார்கள். வரி அல்லது பாகம் அதிகம் வாங்கினாலும் அரசன் தனது இதரகடமைகளை நிறை வேற்றினால் மக்கள் அதைச் சகித்தே வந்தனர்.

சோழ நாட்டின் மிகவும் சிறப்பான மன்னர்களில் ஒருவ னாகக் கருதப்படும் ராஜராஜ சோழன் மூன்றில் ஒருபங்கு வரி வாங்கியதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. ராஜராஜசோழன் பெரும் படைதிரட்டித் தனது ஆட்சி யை விரிவுபடுத்தப் பல போர்களை நடத்தி வெற்றிகண் டான்.அப்போர்களை நடத்துவதற்கு ஏராளமான செல்வம் செலவாகியிருக்கும். அதை ஈடுகட்ட அதிகமான வரியை மூன்றில் ஒரு பங்கு வரை வாங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. அத்துடன் சில மன்னர்கள் மக்களிடம் அதிக வரிவசூல் செய்து கோவில் கட்டியிருக்கிறார்கள், சாலைகள் போட்டிருக்கிறார்கள். சத்திரங்கள் கட்டியிருக்கிறார்கள். மக்கள் இவற்றைப் பொதுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

பெருநில மன்னர்களின் கீழ் இருந்த சிறு நில, குறுநில மன்னர்களும் ஆறில் ஒரு பாகம்தான் விவசாயிகளிடம் வாங்கி அதிலிருந்து ஒரு பகுதியைக் கப்பமாக பெருநில மன்னர்களுக்குச் செலுத்தியிருக்கிறார்கள். பெருநில மன்னர் கள் அதிகமாக பாகம் கேட்டபோது சிறு நில மன்னர்களும் அதிகம் வாங்கியுள்ளார்கள்.

பாகம் வாங்குவதில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும் மன்னர்கள் தங்கள் கடமையாக நீர்ப்பாசன நிலையைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் விரிவுபடுத்துவதும் சமூக நீதியாக அரச நீதியாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த சமூக நீதி அரசநீதி முறைகளை மீறிசில அரசர்கள் நடந்த போது, மக்கள் ஆர்த்தெழுந்த வரலாறுகளும் இந்திய நாட்டில் இருந்தன. அதற்கான விவரங்கள் பலவற்றை மக்கள் இலக்கியங்களில், நாட்டுப்பாடல்களில் காணமுடிகிறது.

ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டபின் புதிதாக உண்டாக்கப்பட்ட சுதேசிமன்னர்கள், ஜமீன்தார்கள், நிலச் சுவான்கள், விவசாயிகளிடம் சாகுபடியாளர்களிடம்

பாதிக்குமேல், மூன்றில் இரண்டுபங்கு வரை கொடுமையான முறையில் வரி வாரம் குத்தகை பாட்டம் என்று வாங்கி யுள்ளார்கள். இந்த,அளவுவாரம் மட்டுமல்ல. இன்னும் பலவேறு முறையான சுரண்டல்களும் இருந்திருக்கின்றன. இந்தக் கொடுமைகளை எதிர்த்துத்தான் சாகுபடி செய்த விவசாயிகள் மிகப்பெரிய போரட்டங்களை நடத்தியுள்ளார்கள்.