உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி .

நிலை பெற்றிருக்கின்றன. ஒன்று கால்வாய்ப்பாசனம்; இரண்டு கண் மாய்ப்பாசனம்; மூன்று கிணற்றுப்பாசனம் இம் மூன்று துறைகளும் தமிழ் நாட்டில் முக்கியமான வை யாகும்.

நாடுமுழுவதிலும்முதல் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டங் களில் பெரிய அணைகள் கட்டப்பட்டன. பாக்ரா நங்கல், ஹீராகுட் அணைகள், தாமோதர பள்ளத்தாக்குத் திட்டம், நர்மதா நதி திட்டம், கிருஷ்ண, துங்கபத்திராநதித் திட்டங் கள் முதலியன குறிப்பிடத்தக்கவை.

தமிழகத்தில் ஏற்கனவே இருந்த மேட்டுர். பெரியாறு, பாபநாசம் அணைகள் தவிர பவானி சாகர், ஆளியாறு. அமராவதி, வைகை, கோதையாறு, மணிமுத்தாறு, சாத்த னுார் அணை, கிருஷ்ணகிரி, அணை, பிளவைக்கல் அனை முதலிய பல அணைகள் கட்டப்பட்டு, கால்வாய்ப் பாசனப்

பகுதி விரிவாக்கப்பட்டது.

ஆயினும் பழைய நீர் நிலைகளான ஏரி குளம் கண்மாய்கள் பற்றி ஐந்தாண்டுத்திட்டங்களில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.அவைகளின் முறையான மராமத்துக் கூட கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு விட்டது. அதனால் தமிழகத்தில் பெரிய பாதிப்புகள் இப்போது ஏற் பட்டுள்ளன. அது பற்றிப்பின்னர் காண்போம்.

அடுத்தாற்போல்கிணற்றுப் பாசனம் விரிவுபடுத்தப் பட்டது. ஏற்கெனவே தமிழகத்தில் நிலத்தடி நீரைப்பயன்படுத்தி கிணற்றுப் பாசனம் ஒரு முக்கிய பாசனத் துறையாக இருந் திருக்கிறது. ஏரி கண்மாய்ப் பாசனப் பகுதிகளிலும் கிட்ட தண்ணிர்த் தட்டுப் பாட்டைச் சமாளிக்கக் கிணறுகளும் பல இடங்களில் தோண்டப்பட்டுள்ளன

பாசனக்கிணறுகள் மட்டும் இப்போது தமிழகத்தில் இருபது லட்சத்திற்கு மேல் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. கிராமங்களுக்கும் மின்சார விநியோகம் விரிவுபடுத்தப்பட்டது. கிராமங்களுக்கு மின் சாரம்வந்ததை ஒட்டித்தமிழகத்தில் கிணற்றுப்பாசனத்திற்கு

மின்சார பம்பு செட்டுகள் கொண்டு வரப்பட்டன.

புதிய கிணறுகள் வெட்டுவதற்கும், மின்சார பம்புசெட்டுகள் போடுவதற்கும் அரசாங்கத்தின் மூலம் விவசாயிகளுக்குக் கடன் கொடுக்கப்பட்டது. இவ்வாறு படிப்படிபாக பாசனக் கிணறுகளின் எண்ணிக்கை 20 லட்சம் வரை உயர்ந்தது.

மின்சார பம்பு செட்டுகளின் எண்ணிக்கையும் சுமார் பத்து லட்சம் வரை உயர்ந்தது. மின் இணைப்பு வராத இடங் களில் அல்லது காலதாமதம் ஏற்படும் இடங்களில் ஆயில் என்ஜின்களும் பயன்படுத்தப்பட்டன. சுமார் மூன்று