பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 பல்லவி யெடுப்பு பாலகர் வாயிற் பரமானந் தத்து திபாரு மென்ற மெய்ப் பராபரனே (தா) 25 அத்திமரத்தைச் சபித்தது தென்மாங்கு 1 அத்திமரத்துக் கிளி - மிக அழகழ காய்ப் பேசுங்கிளி தித்திக்கும் செங்கனியை - அது தேடிப்பார்த்துங் காணவில்லை. 2 அத்திமரத்திலே மிக அழகான பல இலைகள் எத்திவஞ்சித்ததினால் - கிளி இட்ட சாபம் பட்டது பார். 3 அத்திமரம் படவே -கிளை அயன்மரக் கிளி யடைந்து மெத்த மதுரமுள்ள - கனி மிகவுண்டு களித்ததுவே. 4 அத்திமரந் தளிர்க்கும் - அதை அறிகுவீர் வசந்தகாலம் இத்தரையின் முடிவும் - உடன் எட்டிவரும் பைங்கிளியே கிறித்துவின் பாடுகள் கிறித்துவின் சீவியம் முழுவதிலும் அவருடைய பாடு களே பாவிகட்குப் பிரதானமாகும். பாடில்லாமற் பலனில்லை என்றபடி கிறித்துவின் பாடுகளில்லாவிடிற் பாவிகட்கு மீட்பில்லை. ஒவ்வொரு கிறித்தவனும் தன் மீட்புக்குக் காரணமான கிறித்துவின் பாடுகளையே இரவும் பகலும் எண்ணித் தியானித்தல் வேண்டும். இதே நோக்கத்துடன்