பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 5 தேகமதால் நீரின் மேலும் தேவிகத்தாற் பாவிமேலும் தாகமாக இருக்கிறேன் நான் என்று சொன்னார் தம்பி [ரானும் பானமின்றிப் பாய்ந்திரத்தம் போன நிலை 6 பாவம்பட நாகஞ்சாவு பாதளம் பேய் மீது வெற்றி சேவகமோ வேதனையோ சீவமீட்போ முடிந்ததென்றார் பாவபலி யானபெருந் தேவமறி 7 எந்தையே உம் கைகளிலென் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்றுரக்கக் கூவியுடன் எம்பெருமான் மாய்ந்தனரே தந்தையொடு தாமொருவ ரென்றதகை. 34) மாதர் புலம்பல் 'மேரே மௌலா' என்ற மெட்டு பாதார விந்தமே பாவியின் சொந்தமே நாதா பணிந்தமே நம்பியிருந்தமே நானிலத்தும் மேனிலத்தும் நாதனே நல்வேதனே ஈனரைப் போல் ஏனுனக்கே எல்லை யில்லா வேதனை என்னோ கொடுமையீ தெங்கணு முள்ளதோ முன்னோர் கனவிலும் முன்னின தில்லையே பாதகப் பகைவர் பல பந்தமாய் நிர்ப் பந்தமாய்க் கோதில்லா மெய்க்கோ வுனையுங் கொல்லமனம் (வந்ததோ குற்றமில்லாமலே கொல்லவும் நீதமோ கொற்றவனாணையும் கொல்லுவார் போதமோ ஆணிகைகாலேறி ரத்தம் அருவியாய்ப் பாய்ந்தோடுதே மேனியெல்லாம் மாறித்தாகம் மிஞ்சி முகம் வாடுதே ஐயோ இத்தொல்லையை ஆரிடஞ் சொல்லுவேன் மெய்யே இப்புல்லரை மேதினி கொள்ளுமோ வாரடிகள் வீங்கியந்தோ வரைவரையாய்த் தெரியுதே வாதை யெங்ஙன் ஆற்றுவாயென் வயிறுபற்றி யெரியுதே