பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

14
பரமண்டல ஜெபம்.
'பொன்னார் மேனியனே என்ற மெட்டு'

1விண்ணார் மண்டலத்தில் - மிக - வீற்றிருக்கும் எந்தையே
பண்ணார் உந்தன் நாமம் - பரி சுத்தப்படுவதாக
கண்ணார் உம்மரசு - கடி - தாய் வருகவானில் உம்
எண்ணே யாவதுபோல் - ஆக - இப்புவிமே லென்றுமே.

2அன்றே ஊண்டும் யாம் - எமக்- காகார் குற்றம் பொறுக்கும்
நன்றே போலெமக்கும் - அருள் - நாதனே குற்றம்பொறும்
தொன்றார் சோதனையும் - வருந் - துன்பமும் தீர்த்தருளும்
மன்றே உம்முடைமை - ராஜ்யம் வல்லமை மாட்சி.

ஆமென்.
 

15
கவலைப்படாமை.
'கலிலோ' என்ற மெட்டு
பல்லவி

மனமே நீ கவலையுறுவதினால் மருவின தென பெருமை
முழ ஒருமை

அனுபல்லவி


தினமே தன் வினை செய்வதருமை
தெரிவதோ தினமறுமை வெகு சிறுமை (ம)

சரணம்


எனவோ நாம் உண்பது முடுப்பது மென்பதே யுனக்கேனோ
முனமாவி மெய்யுடனளித்தவன் முன்னவை மறுப்பனா
வனமேவு பறவை தாவரமே வாழ்வன உயர்தரமே
தேவகரமே (ம)

 

16
நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனைக் குணமாக்கினது.
'சுஜனஜீவனு' என்ற மெட்டு.
பல்லவி
பரமநாதனே திருப்பதும பாதனே ஏசு