பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தம்பிரானது கண்டதும் மனம்
தாங்காமல் முகங் கடுத்து - மிகத்
தட்டினார் கையைத் தடுத்து-சீமோன்
தரித்தான் வாளுறை மடுத்து - தேவ
தாசரும் முனங் கூறிய தீர்க்க
தரிசனம் வந்ததடுத்து

கோமான் ஏசுவைக் காய்பாவின் மனை
கொண்டுபோய் யூதர் சேர்த்தார்-அங்கு
கூடினார் சபை மூத்தார்-உடன்
கொல்லவே வழி பார்த்தார்-சிறு
குற்றமேனு மகப்படாமையால்
கூறிப்பொய்களைக் கோர்த்தார்

ஆலயக்குறை கூறினார் பரன்
அமைதியாகக் காய்பாவும் - அவர்
அரசரீகம் வினாவும் - அவர்
ஆமென்ற உரை பாவம்-என
ஆடையைக் கிழித் தேசுவை மரத்
தறைய மூப்பரை யேவும்

காதகப் பெரு யூதம் செய்தது
காரியத்தாறு மாறும்- ஏசு
கன்னத்தில் எச்சில் நாறும்--அவரைக்
கடிந்து குட்டிடுந் தோறும்--ஞானக்
கண்ணால் யார் வதை பண்ணிணாரென்று
கண்டு சொல்லெனக் கூறும்

காய்பாவின்மனை யோரமாய்க் குளிர்
காய்ந்த பேதுரு இறையே-என்றுங்
கண்டதில்லென்ற மறையே-மிகக்
காணவே மூன்று முறையே-கூவுங்
காலைச் சேவலைக் கண்டு சிந்தினன்
கண்ணீருங்குட நிறையே