பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

முள்ளின்முடி யுமிழ்நீரொடு சேயுடை மூங்கிற்கழை தாங்கி
எள்ளன் மொழி யெழுதியெதிர் ஏசவும் ஏதும்புகலாதே
வெள்ளம் போலக் குருதிவழிந் தோடநீர் வேட்கை மிக விஞ்சி
கள்ளன் போலச் சிலுவையறை யுண்டதும் கயவனென்னா
லன்றோ

பருமன் மிகுமட மாமதப் பாதகர் பட்டினியிற் குட்டிக்
கருமன்வினைக்காரமே கொடு மோதவும் கன்னஞ்செனி கன்னித்
திருகும் வெயிற் பசிதாகமும் தீராமல் தேக மெலிவாகத்
திருடன் போலச் சிலுவையறை யுண்டதும் தீயேனென்னா
லன்றோ

 

39
சுவிசேடகன் கிறிஸ்தியானுக்குச் சிலுவையைக்
காட்டிச் சொல்வது.

கதர்க்கப்பல் கொடி தோணுதே' என்ற மெட்டு.
(நாதநாமக்கிரியை — ஆதியிலும் பாடலாம்)
பல்லவி

பவச்சுமை தாங்கி பாரதோ!
பரும்பின்மேல் ஏசுகிரு பாகரன் சமாதியோரம்

அனுபல்லவி

பாவியிளைப் பாறுந்தானம்
பரிசுத்தாவி யாதீனம்
ஜீவியப்ர சாதபானம்
சிறந்த கற்பகங்கானம் (ப)

சரணம்

1வருந்திச் சுமக்கும்பாவி வகுந்து விரைந்து மேவி
பொருந்திச் சிலுவை சேவி புரண்டுபோம் பாரந்தாவி
புனைமாறும் பண்டை
வினைபாறும்
புத்தகம்பின் பாதை கூறும் (ப)