பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

 

53
பரிசுத்தாவி.
'சாந்தழலேக' என்ற மெட்டு.
பல்லவி
ஆண்டவரோடேஐக்கியமாக.ஆவியானவர்அருள்வார்.
அனுபல்லவி

மாண்டபராதியே மாண்டெழ நீதியே (ஆ)

சரணம்


1மூண்டெழு தீநாவால் முழங்கியே தாவி
வேண்டிய பலபாஷை விளம்பியே விரைந்தேவி{float right|(ஆ)}}

2பெந்தே கோஸ்தேநாளில் பேணியப் போஸ்தலர்
சிந்தை யொன்றாய்த் தேவான சின்மயானந்தம்போல (ஆ)

3யோவானின் ஞானஸ்நானம் யோர்தானில் நீரே
ஆவியினாலே ஸ்நானம் அடைகுவீர் இனி நீரே (ஆ)

4பேயொடு பாருடல்கள் பிணங்கிய போரிலும்
தீய சோதனையிலும் தேற்றரவாளனாகி (ஆ)

மாண்டு = மரித்து, அபராதி = பாவி. மாண்டு =மாட்சிமைப்பட்டு,

 

54
சவுல் குணப்படுதல்.
'பூங்காவிநோதமே' என்ற மெட்டு.
பல்லவி
தேஜோமயானந்தம் தேவகுமாரபந்தம்
அனுபல்லவி

தீயவினை மாயவரு (தே)

திடுக்கிடும்படி தடித்திலங்கிய (தே)

தித்தித்தகமிகு பத்திச்சுவையுறு (தே)

தெரிசன முறைவரு பரிசன மறிவரு (தே)

தெம்பும்நம்பு மடியவ ரன்பு மின்பும்பெருகிடத் (தே)