பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

 

கும், சில மன்னார்குடிப் பின்றிலேக் கல்லூரித் துணைத்தலைவர் கனம் பொன்னையா அவர்கள் விருப்பத்திற்கும், சில மன்னார்குடி இம்மானுவேல் இசைக்குழாத்தின் குறைபாட்டிற்கும் இணங்கியவை.

இப்புத்தக சம்பந்தமாய் மன்னார்குடி மிஷன் டாக்ற்றர் கனம் எலையாஸ் ஐயரவர்களும், மன்னார்குடிச் சபைத் தலைவர் தனம் சிமித் ஐயரவர்களும் செய்த வுதவிகள் மிகவும் பாராட்டற்பாலன.

இப்புத்தக முடிவுகாறும் தோன்றாத்துணையாய் உடனிருந்துதவிய எம்பெருமான் ஏசுவின் திருவடிகள் என்றும் என் தலைக்கு அணியாவன.

மன்னார்குடி
21-2-1933
ஞா.தே.பா


இசையாசிரிய வாழ்த்து.


நிலைமண்டில வாசிரியப்பா

பொன்னார் வெண்ணெற் பூந்துறை மருத
மன்னார்குடியில் மாண்புற வோங்கத்
தெள்ளிய தலைமைத் தேசிய வுயர்தரக்
கல்லக முதற்பாற் கவின்பெற விளங்கும்
பேரா சிரியன் பேராவுரையன்
திங்கட்டன்மைத் திவ்வுறுகேள்விச்
செங்கோட்டியாழிற் செயிர்தீர் புலவன்
மாரி யென்ன மாறொன்று கருதாச்
சீரிய வின்னிசை செவ்விதிற் சொல்வோன்
இராஜ கோபாலையன் இசைநிறீ இக்
கன்னலுங் கைப்பக் கல்லுங்கரைய
மன்னுக பாமணி மணலினும் பலவே.